ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வந்தவுடனேயே உச்சாணிக்கொம்பில் பறந்த கிரண்.. 5 படங்கள் ஹிட் கொடுத்தும் கேரியரை தொலைத்த பரிதாபம்

“யாடேன்” என்னும் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர்தான் கிரண் இவர். ஹிந்தி மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் 2000களில் மிகவும் பிரபலமாக இருந்தார். பாலிவுட்டில் இவர் நடித்த முதல் படம் இவருக்கு வெற்றிப்படமாக அமையவில்லை என்றாலும் கூட, கோலிவுட்டில் நடித்த முதல் படமே இவருக்கு வெற்றியை தேடி தந்தது. இருப்பினும் 2010ஆம் ஆண்டிற்கு பிறகு இவருக்கு சரியான வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் கூட அந்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்கும் எதிர்பார்த்தது போல் வரவில்லை.

ஜெமினி: சரண் இயக்கத்தில் 2001ஆம் ஆண்டு வெளியான “ஜெமினி” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவார். இவருக்கு தமிழில் முதல் படமே வெற்றியாக அமைந்தது. நடித்த முதல் படத்திலேயே “சிறந்த அறிமுக கதாநாயகி” விருதை வென்றவர். ஆரம்பமே இவருக்கு அசத்தலாக அமைந்தது. இந்தத் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் கவனத்தை எல்லாம் ஈர்த்தவர்.

Also Read:பத்தி எறிய போகும் பிக் பாஸ் வீடு.. டிஆர்பிக்காக முரட்டு வில்லனை தூக்கிய விஜய் டிவி

வில்லன்: கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளியான “வில்லன்” திரைப்படமும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் லாவண்யா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இத்திரைப்படமும் இவருக்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது.

அன்பே சிவம்: சுந்தர் சி இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான “அன்பே சிவம்” திரைப்படம் இதில் ஒன்று. பாலசரஸ்வதி என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு “தமிழ்நாடு ஸ்டேட் பிலிம்” விருது கிடைத்தது. இந்த திரைப்படம் சென்னையில் மட்டும் 13.1 கோடியை வசூலை தாண்டியது. இதுவும் பெரிய வெற்றி படமாக இவருக்கு அமைந்தது.

Also Read:Kushi Movie Review- மூச்சு முட்ட காதலிக்கும் விஜய் தேவரகொண்டா-சமந்தா.. குஷி எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

தென்னவன்: தமிழ் சினிமாவில்  நடிகர் விஜயகாந்த் உடனும் ஏ.எம்.நந்தகுமார் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான “தென்னவன்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படமும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிக்கும் திரைப்படங்கள் ஆரம்பக்காலத்தில் இவருக்கு வெற்றியை தேடி தந்தது. அது மட்டும் இல்லாமல் பல திரைப்பட வாய்ப்புகளும் இதன் மூலம் இவருக்கு தேடி வந்தது.

நியூ: 2004 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளியான “நியூ” திரைப்படமும் இவற்றுள் ஒன்றாகும். திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகி நடிக்கும் வாய்ப்பு எல்லாம் கிடைக்கவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் நடித்து வெளியான திரைப்படங்கள் என்னதான் இவருக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தாலும், இறுதியில் எதுவும் கைகொடுக்கவில்லை.

Also Read:ஆடியோ லான்ச் வேண்டவே வேண்டாம்.. நியாயமாய் விஜய் கூறும் 5 விஷயங்களால் லோகேஷ்க்கு செக்

Trending News