வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

குஷ்பூ புருஷன் என கொண்டாடப்பட்ட சுந்தர்.சி.. இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா.?

Sundar C Networth: 80 மற்றும் 90களின் காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய துள்ளலான அழகால் கட்டி இழுத்தவர்தான் நடிகை குஷ்பு. அவர் மீது தீவிர அன்பு வைத்திருந்த ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டிய சம்பவமும் தமிழ்நாட்டில் அரங்கேறி இருக்கிறது. அதே நேரத்தில் தங்களுடைய அன்பை ரத்தத்தால் கடிதம் எழுதி அனுப்பிய ரசிகர்களும் உண்டு. அப்படிப்பட்ட குஷ்பூவை திருமணம் செய்து கொண்டு பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானவர்தான் இயக்குனர் சுந்தர் சி.

இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவ இவருக்கு அவரைப் போலவே, நக்கலான நையாண்டி காமெடி இயல்பாகவே வந்துவிட்டது. சுந்தர் சி படத்திற்கு போனால் வயிறு வலிக்க சிரிப்பதற்கு கேரண்டி என குடும்பங்கள் இவருடைய படங்களை கொண்டாடினார். தன்னுடைய முதல் படமான முறைமாமன் படத்தை இயக்கும் போது தான் குஷ்பூவுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு அனந்திகா மற்றும் அவந்திகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

முறைமாமன் படத்தை தொடர்ந்து உனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத் தேடி, மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம் போன்ற பல ஹிட் படங்களை சுந்தர் சி கொடுத்தார். கார்த்திக் மற்றும் கவுண்டமணி காமெடி காம்போவை உருவாக்கி வெற்றி கண்ட சுந்தர் சி, நல்ல உணர்வுபூர்வமான கதையையும் தன்னால் கொடுக்க முடியும் என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிரூபித்த படம் தான் அன்பே சிவம்.

Also Read:ரஜினிக்கு வெள்ளையாக இருந்தால் பிடிக்காதா?. 73 வயதில் எனர்ஜியாக இருப்பதன் சீக்ரெட்

இயக்குனராக களம் கண்ட சுந்தர் சி கடந்த 2006 ஆம் ஆண்டு ஹீரோவாக தலைநகரம் என்னும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அதை தொடர்ந்து 23 ஹிட் படங்களை கொடுத்த சுந்தர் சிக்கு அடுத்தடுத்து அவருடைய காமெடி கை கொடுக்காமல் போனதால் சில சொதப்பல்களும் நடந்தது. இருந்தாலும் அரண்மனை சீரிஸ் மூலம் குழந்தைகளிடம் நல்ல வரவேற்பு இவருடைய இயக்கத்திற்கு இன்று வரை இருக்கிறது.

சுந்தர் சி சொத்து மதிப்பு

இன்றைய தேதிப்படி சுந்தர் சி ஒரு படத்தை இயக்குவதற்கு மூன்று முதல் நான்கு கோடி சம்பளமாக வாங்குகிறார். அதே நேரத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கு ஒன்றிலிருந்து இரண்டு கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார். சுந்தர் சி யின் மொத்த சொத்து மதிப்பு 40 முதல் 50 கோடி வரை என சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ என்ற இரண்டு சொகுசு கார்களை இவர் வைத்திருக்கிறார். சென்னையில் இவருக்கு சொந்தமான ஒரு பெரிய பங்களா இருக்கிறது.

இயக்குனர் மற்றும் நடிகர் என்று இல்லாமல் சுந்தர் சி, அவருடைய மனைவி குஷ்பு உடன் இணைந்து படங்கள் தயாரித்தும் வருகிறார். இவர்களது தயாரிப்பில் நான் சிரித்தால், நட்பே துணை, மீசைய முறுக்கு, அரண்மனை 2 போன்ற படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. அதேபோன்று குஷ்பூ அரசியலில் இருந்தாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் படங்கள் நடித்து வருகிறார். இவருடைய சொத்து மதிப்பையும் சேர்த்து பார்த்தால் மொத்தம் 110 கோடி பேரும் என அறியப்படுகிறது.

Also Read:சம்பளத்தை உயர்த்தி புது பார்முலா போட்ட சூப்பர் ஸ்டார்.. கெத்து குறையாமல் ரஜினி ஆடும் பேயாட்டம்

Trending News