திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

முதுகில் குத்திய டாட்டூவுடன் புகைப்படம் வெளியிட்ட குஷ்பூ.. குவியும் கமெண்ட்டுகள்

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கோயில் கட்டி கும்பிடும் அளவுக்கு பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் 80 மற்றும் 90 காலகட்டங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார்.

அதன் பிறகு இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் பிஸியாக இருந்தார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. தற்போது இவர் சினிமாவில் அம்மா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்து வருகிறார்.

இது தவிர அரசியல், பட தயாரிப்பு, சீரியல் தயாரிப்பு என்று பிஸியாக இருக்கும் குஷ்பு தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அவர் 90 காலகட்ட திரைப்படங்களில் எப்படி இருந்தாரோ தற்போது அப்படியே மாறி இருக்கிறார்.

மேலும் அவர் வித விதமாக மாடர்ன் உடை அணிந்து அந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் நீங்கள் மீண்டும் ஹீரோயினாக நடிக்கலாம் என்று புகழ்ந்து வருகின்றனர்.

இந்த வகையில் குஷ்பு தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார். அதில் சிவப்பு நிற புடவையில் முதுகில் டாட்டூ குத்திய படி இருக்கிறார். இந்த போட்டோ தற்போது பலராலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

kushpoocinemapettai
kushpoocinemapettai

இதைப் பார்த்த ரசிகர்கள் நீங்கள் அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்பே உடல் எடையை குறைத்து இருந்தால் அந்த படத்தில் நீங்கள் ஹீரோயினாகவே நடித்திருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

Trending News