செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வரிசையா 14 படம் ப்ளாப்.. ராசியில்லாத நடிகை என ஓரம் கட்டப்பட்ட லட்சுமியின் மகள்

ஒரே படத்தின் மூலம் உச்சத்திற்கு சென்று அடுத்த சில வருடங்களிலேயே சினிமாவை விட்டு தூக்கி வீசப்பட்டதாக வரிசை நடிகை ஒருவர் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் ஒரே நேரத்தில் 14 படங்களில் ஒப்பந்தமானாராம்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி. புரட்சிக் கலைஞர் எம்ஜி ஆர் காலகட்டங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவை கலக்கிய நடிகைகளில் இவரும் ஒருவர்.

lakshmi-cinemapettai
lakshmi-cinemapettai

நடிகை லட்சுமியும் நயன்தாரா போல தான். சொந்த வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் சினிமாவில் எப்போதுமே முன்னணி இடத்தில் இருந்தவர். இவரது மகளான ஐஸ்வர்யா சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

1991 ஆம் ஆண்டு நிழல்கள் ரவி, சரண்யா பொன்வண்ணன், ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் புடிச்ச மாப்பிள்ளை. இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இந்த படத்தின் வெற்றியால் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் 14 படங்களில் நடிக்க ஒப்பந்தமானாராம் ஐஸ்வர்யா. அதில் ஒரு படம்தான் பிசி ஸ்ரீராம் இயக்கிய மீரா. ஆனால் இந்த 14 படங்களுமே தன்னை கைவிட்டதாக குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

aiswarya-cinemapettai
aiswarya-cinemapettai

ஒரு படம்கூட வெற்றியைப் பெறாததால் ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தி ஓரம் கட்டி விட்டதாக கூறி வருத்தப்பட்டுள்ளார். அதன்பிறகு நாயகியாக சில படங்களில் நடித்தாலும் பின்னாளில் குணச்சித்திர நடிகையாக தற்போது வரை நடித்து வருகிறார்.

Trending News