ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பிக் பாஸ் டைட்டில் வின்னருடன் ஜோடி போடும் லட்சுமி மேனன்.. பூஜையுடன் துவங்கப்பட்ட படப்பிடிப்பு

Actress Lakshmi Menon pairs up with Bigg Boss title winner: சமீபத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்த நடிகை லட்சுமி மேனன், இப்போது பிக் பாஸ் டைட்டில் வின்னர் உடன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க கமிட்டாக இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று மதுரையில் துவங்கப்பட்டுள்ளது.

பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தின் மூலம் மலை கிராமத்து பெண்ணாக இளசுகளை கவர்ந்த நடிகை லட்சுமி மேனன், அதன் தொடர்ச்சியாக சுந்தரபாண்டி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன் என முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் திடீரென்று படிக்கப் போவதாக சொல்லிவிட்டு ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் போய்விட்டார். மார்க்கெட் பீக்கில் இருந்த சமயத்தில் பிரேக் எடுத்தது தான் லட்சுமி மேனனுக்கு இப்போது டாப் ஹீரோக்களின் பட வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

லட்சுமி மேனன் மறுபடியும் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தின் மூலம் ரீ என்று கொடுத்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதேபோல் தான் சந்திரமுகி 2 படமும் படுதோல்வியை சந்தித்தது. சமீப காலமாகவே முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத லட்சுமி மேனன் இப்போது பிக் பாஸ் நான்காவது சீசனின் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

Also Read: ஹீரோயின்கள் பழிக்கு பழி வாங்கும் 5 படங்கள்.. காலை சுற்றும் கருநாகமாக மாறிய ஆண்ட்ரியா சந்திரா

பிக் பாஸ் டைட்டில் வின்னருடன் லட்சுமி மேனன் சேர்ந்து நடிக்கும் புதிய படம்

பெயரிடப்படாத இந்தப் படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து  உருவாகிறது. படத்தினை ராஜசேகர பாண்டியன் இயக்குகிறார். இதில் லட்சுமி மேனன்- ஆரி அர்ஜுனனுடன் பிளாக் பாண்டி, வையாபுரி,  ஜெயிலர் தன்ராஜ், மைம் கோபி, கனிமொழி உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடிக்கின்றனர்.

மெட்ராஸ் டெக் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை அழுத்தமாக சொல்லப் போகின்றனர். இந்தப் படத்தின் மூலம் லட்சுமி மேனன் எப்படியாவது விட்ட மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என நினைக்கிறார். இந்த படத்திற்காக பூஜை போடப்பட்ட புகைப்படங்கள் இப்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இதைப் பார்த்த ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை படக்குழுவினருக்கு தெரிவிக்கின்றனர். 

ஆரி அர்ஜுனன்- லட்சுமி மேனன் நடிக்கும் புதிய படத்தின் பூஜை 

lakshmi-menon-new-flim-cinemapettai
lakshmi-menon-new-flim-cinemapettai

Also Read: காடுகளை மையமாகக் கொண்டு வெற்றி கண்ட 6 படங்கள்.. வேறு பரிமாணத்தில் அசத்திய கோவை சரளா

Trending News