செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பரத் பட நடிகையிடம் பறிபோன பணம், நகை.. வில்லி ஹீரோயினுக்கு ஏற்பட்ட விபரீதம்

தமிழ் , தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை பூர்ணா தற்போது திருமணம் செய்துகொள்ளபோவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார் பூர்ணா.. இதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்த இவர், தெலுங்கில் அவுனு என்ற பேய் படத்தில் நடித்து பிரபலமானார். அதை தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்..

இதனிடையே தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூர்ணா தன் காதலரானா ஷானிட் ஆசிப் அலி என்ற பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக புகைப்படத்தை வெளியிட்டு குடுமபத்தார் ஆசியுடன் எங்களது திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே நடிகை பூர்ணா திருமணம் செய்துகொள்வதாக அறிவித்த நிலையில், பூர்ணமாவின் பணம் நகை அனைத்தையும் மாப்பிள்ளையாக வந்தவர் ஏமாற்றிவிட்டார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டது. இது எந்த ஒரு நடிகைக்கும் நிகழகூடாத சோகமாக பார்க்கப்பட்டது. இதனிடையே தனது நீண்ட நாள் நண்பரான ஷானிட் ஆசிப்அலியை பூர்ண காதலித்து திருமணம் செய்யவுள்ளார்.

துபாய்க்கு செல்வோருக்கு விசா வழங்கும் ஜே.பி.எஸ் குரூப் ஆப் கம்பெனி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் நடிகர் நாசர், நடிகை காஜல் அகர்வால், நடிகை அமலாபால் நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பிரபலங்கள் துபாய் செல்வதற்கான கோல்டன் விசா பெற்றுள்ளனர்.

இதனிடையே தற்போது நடிகை பூர்ணா மற்றும் சுரேஷ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ஜோசப் திரைப்படத்தின் ரீமேக்காக தமிழில் விசித்திரன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு2 திரைப்படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News