தமிழ் சினிமாவில் தளதளவென்று இருந்த நடிகை ஒருவர் மளமளவென முன்னணி நடிகையாக வளர்ந்து வந்த நேரத்தில் இளம் நடிகர் ஒருவருடன் காதல் விவகாரங்களில் சிக்கினார்.
தமிழ் ரசிகர்களுக்கு எப்போதுமே கொஞ்சம் குண்டாக இருக்கும் நடிகை மீது தனி அக்கறை இருக்கும். ஒரு சில படங்கள் நடித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விடுவார்கள்.
அந்த வகையில் ஆரம்பத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தவர் தான் அந்த பப்ளிமாஸ் நடிகை. வடக்கில் இருந்து வந்திருந்தாலும் தமிழில் இவருக்கு ஒரு நல்ல இடம் கிடைத்து.
தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தமிழ் சினிமாவில் உள்ள வாரிசு நடிகர் ஒருவரின் மீது காதல் வயப்பட்டார். ஒரு படத்தில் நடித்தபோது இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரும் பார்ட்டி, பீச் என ஜாலியாக சுற்றி வந்தனர்.
ஆனால் கடைசியில் அந்த நடிகையின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்ப தாயாரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அந்த இளம் நடிகரை கழட்டி விட்டார் அந்த நடிகை. அதன்பிறகு அந்த நடிகர் சில வருடங்கள் சினிமாவை விட்டு விலகி பாட்டிலும் கையுமாக அலைந்தார்.
இதற்கிடையில் அந்த நடிகையின் சினிமா வாழ்க்கையும் மந்தமாகி விட்டது. ஆனால் திடீரென அந்த இளம் நடிகரின் சினிமா கேரியர் தற்போது வேக வேகமாக பிக்கப் ஆகி கொண்டிருப்பதைப் பார்த்த அந்த நடிகை பேசாமல் அந்த நடிகரை காதலிக்கும் போதே கல்யாணம் பண்ணி செட்டிலாகி இருக்கலாம் என புலம்பி வருகிறாராம்.