ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

தன்னைவிட 4 வயது சின்ன பையனை காதலிக்கும் முன்னணி நடிகை.. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதாம்

தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நடிகர் ஒருவரின் படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் நடித்தவர்தான் அந்த வட இந்திய நடிகை. அம்மணி பார்ப்பதற்கு நல்ல அம்சமாக இருப்பதால் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் என்ன வட இந்திய வடை என்பதால் நம்ம ஊரில் விற்பனை ஆகவில்லை.

ஆனால் அம்மணியின் சமூக வலைதளப் பக்கத்தில் நம்ம ஊரு ரசிகர்கள் எப்போதுமே அதிக அளவு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதுவும் நம்ம ஊரில் இருந்து சென்று பாலிவுட்டில் டாப் இயக்குனராக வலம் வரும் அந்த நடன இயக்குனர் படத்தில் அம்மணி தான் பிரதான நாயகி.

அந்த நடிகைக்கு சமீபகாலமாக தன்னைவிட வயது குறைவான நடிகர் மீது மோகம் அதிகமாகி காதலாக மாறி விட்டதாக வட இந்திய முழுக்க ஒரே பேச்சு. சும்மா ஹனிமூன் ரேஞ்சுக்கு அவுட்டிங் பட்டையை கிளப்புகிறார்கள்.

அந்த நடிகைக்கும் வயது ஏற ஏற படவாய்ப்புகளும் கைவசம் இருக்கிற மாதிரி தெரியவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரம் செட்டில் ஆகிவிடலாம் என நினைத்து விட்டாரோ என்னமோ அந்த நடிகருடன் அநியாயத்திற்கு நெருக்கம் காட்டி வருவதாக மற்ற நடிகைகள் பொறாமையில் இருக்கின்றனர்.

கூடிய சீக்கிரத்தில் கல்யாணம் என்றெல்லாம் பேச்சுக்கள் வருகிறது. ஆனால் குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்கிற மாதிரி சினிமாக்காரன் பேச்சு சிரிச்சுகிட்டே போச்சு என விட்டு விட வேண்டியது தான் என்கிறார்கள். ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பது போல அவர்களே எல்லாம் ஆடி முடிந்த பின்னர் அடங்கி விடுவார்கள் என பாலிவுட் மூத்த நடிகர்கள் அட்வைஸ் செய்து வருகிறார்களாம்.

- Advertisement -spot_img

Trending News