புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குழந்தை விஷயத்தை மறைக்கும் முன்னணி நடிகை.. எல்லாம் காசு சம்பாதிக்க தான்!

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை ஒருவர் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை மறைத்து வருகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அது ஏன் என்ற குழப்பம் நிலவிய நிலையில் அதற்கான உண்மைக் காரணமும் வெளியில் வந்துள்ளது.

விஜய் அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டவர் தான் அந்த நடிகை. அதுவும் விஜயுடன் மூன்று படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். வடக்கிலிருந்து வந்திருந்தாலும் அவருடைய ஆட்சி என்னமோ தெற்கில் தான். ஆனால் தற்போது வயதானதால் பெரிய அளவு மார்க்கெட் இல்லாமல் தடுமாறி கொண்டிருக்கிறார்.

இதனால் ரொம்ப வயதான நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் அந்த நடிகை. அப்படிப்பட்ட படங்களில் தன்னால் முடிந்தவரை சம்பளத்தை உயர்த்தி வாங்கிவிடுகிறாராம் அந்த நடிகை. ஆனால் தற்போது கர்ப்பமாக இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

இது தெரிந்த தயாரிப்பாளர்கள் பலரும் தற்போது கொடுத்த அட்வான்சை திரும்ப வாங்குவதற்காக அந்த நடிகையின் வீட்டு பக்கம் படையெடுக்க தொடங்கி விட்டார்களாம். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நடிகை நான் கர்ப்பமாக இல்லை என்பதை தயாரிப்பாளர்களுக்கு புரியவைக்க தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆனால் அவருக்கு விரைவில் குழந்தை பிறக்கப் போவதாகவும் அதன் பிறகு சினிமா மார்க்கெட்டை தக்க வைப்பதற்காக தான் இப்படி ஒரு வேலையை செய்து வருவதாகவும் கூறுகின்றனர். இதேபோல்தான் ஸ்ரேயா தனது குழந்தை பிறந்ததை ஒரு வருடம் கழித்துதான் தெரிவித்தார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. சினிமா மார்க்கெட்டுக்காக குழந்தை பிறப்பதை மறைப்பதை என்ன சொல்வது என்கிறது சினிமா வட்டாரம்.

Trending News