சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

நடிகை விவாகரத்திற்கு மகாபிரபு தான் காரணமாமே.. ஒரு படம்தான், எல்லாம் கிளோஸ்

நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் பின்னர் ஒரு கட்டத்திற்கு பிறகு விவாகரத்து செய்து கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒரு இளம் ஜோடியினர் விவாகரத்து செய்துகொண்டு பிரிந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

அதற்கு முன்னரே இருவரைப் பற்றியும் பல்வேறு வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. இருவருக்குள்ளும் ஒத்துக் கொள்ளவில்லை எனவும் இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர் எனவும் அக்கட தேசத்தில் இருந்து தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

நல்லா இருக்கிற குடும்பத்தில் சாணியை எடுத்து வீசியது போல பத்திரிகையாளர்கள் இப்படித்தான் எதையாவது உளறிக் கொண்டிருக்கிறார்கள் என ரசிகர்களும் தங்களது வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் திடீரென இருவரும் பிரிந்து போகிறோம் என கூறியது அனைவருக்குமே அதிர்ச்சி தான்.

அதைவிட பேரதிர்ச்சி ஒன்று உள்ளது. அந்த நடிகை சமீபத்தில் நடித்த வெப்சீரிஸ் ஒன்றில் மட்டமான காட்சிகளை நடித்ததால் தான் கணவர் விட்டுச் சென்றதாக ஒரு செய்தி உள்ளது. ஆனால் அதற்கு முன்பே தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஒருவருடன் ஒரு குடும்பத்தின் மிக நெருக்கமாக அவருடன் நடித்திருந்தார். அன்றிலிருந்தே இந்த விவாகரத்து விஷயம் சூடு பறந்தது என்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள்.

அந்த நடிகர் தொட்டதெல்லாம் விவகாரத்தில் தான் முடிந்துள்ளன. அந்த நடிகருடன் நட்பாக பேசினாலே நடிகைகளின் கணவருக்கு விவாகரத்து பயம் வந்து விடுகிறது. அந்த அளவுக்கு விவாகரத்து வாங்கி கொடுப்பதில் ராசியான நடிகராக இருக்கிறார்.

இது தெரியாம அந்த சின்ன பையனும் போய் சந்தேகப்பட்டு விட்டோமே என அவருக்கு ஆறுதல் கூறி வருகிறதாம் சினிமா வட்டாரம். ஆனால் அந்த நடிகையோ விவாகரத்து பற்றி எல்லாம் கவலைப் பட்டதாக தெரியவில்லை. அடுத்தடுத்து வடக்கில் பல படங்களை புக் செய்து வருகிறாராம். எது எப்படியோ, நல்லா இருந்தா சரிதான்.

Trending News