புதன்கிழமை, ஜனவரி 22, 2025

45 வயது நடிகருக்கு வலை வீசிய 30 வயது நடிகை.. மாட்டுவாரா வாரிசு நடிகர்?

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ராசியில்லாத நடிகை என துரத்தி விடப்பட்ட நடிகை ஒருவர் தற்போது மீண்டும் பெரிய நடிகரின் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளவர் மிகப்பெரிய பிளான் ஒன்றுடன் வருகிறாராம்.

துரத்தி விடப்பட்ட அதே தமிழ் சினிமாவில் தான் யார் என்று நிரூபிக்க வேண்டும் என்றார் நோக்கத்தில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை பெறுவதில் தீவிரமாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் உச்ச நட்சத்திரம் படத்தை இயக்கி வரும் இயக்குனர் ஒருவரின் படத்தில் அடுத்ததாக வாரிசு நடிகர் ஒருவரை நடிக்க உள்ளார். இந்த படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.

அந்த நடிகரும் இயக்குனரும் தற்போது ஒரே தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் வெவ்வேறு படங்களில் பணியாற்றி வரும் போது அடுத்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்களாம்.

இதன் காரணமாக அந்த கூட்டணி விரைவில் இணைய உள்ளது. பக்கா மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகும் அந்த படத்தில் நாயகியாக நடிக்க அந்த முப்பது வயது நடிகை துடித்துக் கொண்டிருக்கிறாராம்.

டாப் நடிகரின் படத்தை போலவே அந்த வாரிசு நடிகரின் படத்தையும் பிடித்துவிட வேண்டும் என படக்குழுவினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு வலியப்போய் நட்பு வலைவிரித்து வருகிறாராம் நடிகை.

Trending News