சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

தமிழில் பேசாதீங்க என்றவருக்கு மீனா-வின் சிறப்பான செய்கை . . இதான் அவன் பொருள எடுத்து அவனையே செய்றது

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த மீனா, பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர், கடந்த 2022இல் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மீனாவுக்கு நைனிகா (13) என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறார். விஜய்யின் தெறி படத்தில் நடித்திருந்தார். கடைசியாக மீனா த்ரிஷியம் 2, ப்ரோ டாடி படங்களில் நடித்திருந்தார். தற்போது 2 படங்களில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் இன்றளவும் பிசி நடிகையாக வளம் வருகிறார்.

இந்நிலையில் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் (ஐஐஎஃப்ஏ) சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அனிமல் படம் பல விருதுகளை வென்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகை மீனாவிடம் இது ஹிந்தி ப்ரோக்ராம் ஹிந்தியில் பேசும்படி கேட்கப்பட்டது. அதற்க்கு நச் என்று பதில் சொல்லி, தென்னிந்தியாவை நெகிழ வைத்துள்ளார்.

நடிகை மீனா கொடுத்த நெத்தியடி வீக்கம், ஒரு 2 வாரத்திற்காவது குறையாமல் இருக்கும்.. நடிகை மீனா, தென்னிந்தியாவை பெருமை பட வைக்கும் அளவில் ஒரு அழகான பதிலை, வாழைப்பழத்தில் ஊசியை இறக்குவது போல சொல்லி இருக்கிறார். அவர் “அதற்கு நடிகை மீனா, “இது ஹிந்தி விழாவா? பிறகு ஏன் என்னை அழைத்தீர்கள்? நான் இது தென்னிந்திய விழா என நினைத்தேன். தென்னிந்திய படங்களும் தென்னிந்திய நடிகர்களும் சிறப்பானவர்கள்.”

“நான் ஒரு தென்னிந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். ஐஃபா உர்சவம் தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்திய சினிமாக்காரர்களையும் ஒன்றிணைத்து பெரிய நிகழ்வாக நடத்துகிறது” என்று பேசி அனைவரையும் வாயடைத்து போக வைத்துள்ளார்.

பொதுவாகவே, தென்னிந்திய மீடியா அடிக்கடி இப்படி அடி வாங்குவது, பாலிவுட்க்கு பழகி போயிவிட்டது.. என்ன செய்வது, அடி வாங்கியே பழகிவிட்டனர். ஏஆர் ரஹ்மானிடம் அடி பட்டுமா இன்னும் திருந்தாம இருக்கீங்க என்று நெட்டிசன்ஸ் கிண்டல் செய்து வருகின்றனர்.

Trending News