மலையாள நடிகையான மீராஜாஸ்மின் மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். அதன்பிறகு முன்னணி நடிகர்களான தளபதி விஜய், விஷாலுடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பை வெகு சீக்கிரமே பெற்றார்.
2000 ஆண்டுகளின் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த மீரா ஜாஸ்மின், கடந்த 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு ரசிகர்களை தவிக்க விட்டார். திருமணத்திற்குப் பிறகு படங்களில் பெரும்பாலும் நடிக்க ஆர்வம் காட்டாத மீரா ஜாஸ்மின் அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
ஆனால் தற்போது தன்னுடைய செகண்ட் இன்னிங்சை துவங்கி உடல் எடையை முற்றிலும் குறைத்து ரன் படத்தில் பார்த்த மீரா ஜாஸ்மின் ஆகவே மாறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அத்துடன் இவர் தற்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய கிளாமர் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை குதூகலமாக்கியுள்ளார்.
இந்தப் புகைப்படங்களில் மீரா ஜாஸ்மின் கவர்ச்சி தூக்கலான உடையில் காட்சியளிப்பதால் ஏகப்பட்ட லைக்குகள் குவிகிறது. அத்துடன் சமீபத்தில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் லோ நெக் உடைய உடையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்திருக்கிறார்.

இப்படி வித்தியாசமான போஸ்களில் ஏழுவிதமான புகைப்படங்களை எடுத்து அதனுடன் ‘ஏழு நாட்கள், ஏழு மனநிலை, ஏழு வண்ணங்கள்’ என்ற கேப்சர் உடன் பதிவிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு அவருடைய ரசிகர்கள், ‘ஏழு அதிசயத்தை இதுவரை பார்த்திருக்கிறோம். நீங்கள்தான் எட்டாவது அதிசயம்’ என உருகி உருகி கமெண்டுகளை தட்டி விடுகின்றனர்.

தற்போது மீரா ஜாஸ்மின் மலையாளத் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இனிவரும் தமிழ் படங்களிலும் மீரா ஜாஸ்மினின் பார்ப்பதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் மீராஜாஸ்மின் இனி வெளியாகும் படங்களில் கதாநாயகியாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.