பிக்பாஸ் பிரபலமான மாடல் அழகி மீரா மிதுன், சமூக வலைதளங்களில் அரசியல் முதல் சினிமா பிரபலங்களை விமர்சித்து பேசியதன் மூலம் பலருடைய கோபத்தை சம்பாதித்துள்ளார். அத்துடன் அண்மையில் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததால், பல புகார்கள் மீரா மிதுன் மீது கொடுக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி சென்னை போலீசார் மீரா மிதுனை கைதுசெய்து ஆஜர்படுத்தினர். அதன்பின்பு சைதாப்பேட்டை 17வது குற்றவியல் நீதிமன்றத்தால் பத்து நாட்கள் அதாவது ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
விசாரணைக்கு பின்பு நீதிமன்றத்தில் ஆஜரான மீரா மிதுன், ஏற்கனவே இவர் மீது போடப்பட்ட நிலுவை வழக்குகள் உள்ளதால் அடுத்தடுத்த வழக்கு விசாரணையால் தன்னை போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக நீதிபதியிடம் மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எழும்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றும் ஊழியரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த வழக்கிற்காகவும், 2020 ஆம் ஆண்டு ஜோ மைக்கேல் என்பரை தாக்க திட்டமிட்ட வழக்கிற்காகவும் மீரா மிதுன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதனை விசாரித்த நீதிபதி மீரா மிதுன் ஜாமின் வழங்க உத்தரவிட்டார். இருப்பினும் இன்னும் அவர் மீது உள்ள மற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மீரா மிதுனை விடுவிக்காமல், வரும் 17ஆம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து மீரா மிதுன் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே நீதிமன்றத்தின் காவல்துறையின் மீது தற்கொலைக்குத் தூண்டுவதாக மீரா மிதுன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.