புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பணத்தாசையில் அலையும் 39 வயது நடிகை.. போற பக்கமெல்லாம் பல்லைக் காட்டும் வேலைதானாம்!

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சமீபகாலமாக துணை நடிகையாகவும், விளம்பரப் படங்களிலும் நடித்து வருகிறார். சில காலமாக சினிமாவில் இல்லாததால் பெருமளவில் அவரது வருமானம் தடைபட்டதாம்.

இதனால் விட்டதை இரண்டு மடங்காக பிடித்துவிட வேண்டும் என்பதற்காக போகிற பக்கமெல்லாம் தயாரிப்பாளர்களை பார்த்து வேண்டுமென்றே அசடு வழிந்து எனக்கு ஒரு வாய்ப்பு தரலாமே என சைகை காட்டுகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் முப்பது செகண்ட் வந்து போகும் விளம்பரப் படத்திற்கு லட்சக்கணக்கில் பில்லு போடுகிறாராம் அம்மணி. இதற்கு காரணம் அந்த நடிகையை திருமணம் செய்துகொண்ட நடிகருக்கு பட வாய்ப்பு இல்லாதது தான் என்கிறார்கள்.

அம்மணி அந்த நடிகரை கல்யாணம் செய்து கொள்ளும் போதே அவர் ஒன்றும் பெரிய நடிகர் இல்லை. ஏதோ சில படங்களில் நடித்துக் கொஞ்சம் பிரபலமானவராக வலம் வந்தார். தற்போது அவருக்கு ஹீரோ வாய்ப்புகள் சுத்தமாக இல்லாததால் வில்லன் வேடங்களிலும் துணை நடிகர் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

அப்படி ஸ்டைலிஷ் வில்லன் என பில்டப் கொடுத்து வெளியான ஒரு படம் ஒன்று படு குப்பையாக இருந்தது. அதன் காரணமாக இருந்த மார்க்கெட்டும் போக தற்போது படவாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே சுற்றி வருகிறாராம். குழந்தைகள் பெற்ற பிறகு தற்போது மீண்டும் உடல் எடையை எல்லாம் குறைந்து பழைய நிலைமைக்கு வந்த 39 வயது நடிகை இவரை நம்பினால் வேலைக்கு ஆகாது என மீண்டும் தன்னுடைய பழைய தொழிலுக்கு கிளம்பி விட்டாராம்.

தற்போது கணிசமாக இவருக்கு படவாய்ப்புகளும் கிடைத்து வருவதாக கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் சிலகாலமாக பணத்தையே கண்ணில் பார்க்காதது போல நடந்து கொள்கிறாராம் அந்த நடிகை. பேராசை பெருநஷ்டம் ஆகாமல் இருந்தால் சரி!

Trending News