தமிழ் சினிமாவைப் பொருத்தவரை சமீபகாலமாக பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றால் பலான புகைப்படங்களை வெளியிட்டாக வேண்டும் என்ற ரூல்ஸ் போட்டு விட்டார்கள் என்பது தெரியவில்லை. சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை கட்டியவருக்கு காட்ட வேண்டியதை கண்ணாடி போல் பளிச்சென ரசிகர்களுக்கு காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் சினிமாவில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் பெரிய அளவு வரவேற்பு கிடைக்காத அந்த முப்பது வயது தெற்றுப் பல் நடிகை, குறிப்பிட்ட டிவி சேனலில் சேர்ந்த பிறகு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது.
அந்த மவுசை பயன்படுத்தி பெரிய முதலாளி வீட்டிற்குள் சென்றார் அந்த நடிகை. ஆரம்பத்தில் சிரிச்சு சிரிச்சு ரசிகர்களை மயக்கிய அந்த நடிகையின் போக்கு போகப்போக வெட்ட வெளிச்சமானது. நடிகை நிறைய கோக்குமாக்கு வேலை செய்கிறார் என்பதைக் கண்டுபிடித்த ரசிகர்கள் அவருக்கு ஓட்டு போடாமல் தோற்கடித்து விட்டனர்.
ஆனால் முதல் பரிசு பெற்றவருக்கு கூட அப்படி ஒரு வரவேற்பு இல்லை. என்னமோ மிலிட்டரி பார்டரில் 10 பேரை சுட்டு விட்டு வந்தது போல அவரது குடும்பத்தினர் போட்ட சீன் இருக்கிறதே. அப்பப்ப்பா, மாலை என்ன மரியாதை என்ன வரவேற்பு தான், கொண்டாட்டம் தான்.
இனிமேல் நான் தான் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயின் என்ற கனவுடன் பெரிய முதலாளி வீட்டை விட்டு வெளியே வந்தவருக்கு சினிமா துறையினர் பட்டை நாமம் போட்டு விட்டனர். சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லை. கைவசம் இருக்கும் சில படங்களிலும் இரண்டாம் கட்ட கதாநாயகி வேடம்தானாம்.
பட வாய்ப்பை நம்பினால் பணம் தேத்த முடியாது என்பதை தெரிந்து கொண்ட அந்த நடிகை தற்போது சின்ன சின்ன விஷயங்களை புரமோட் செய்வதற்கு கூட லட்சக்கணக்கில் பில் போட்டு வருகிறாராம். அதுவும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஒரு பொருளை விளம்பரம் செய்ய 2 முதல் 3 லட்சம் பணம் கேட்கிறாராம். பணத்தை கொடுத்தால் வேலை நடக்கும் என கரார் காட்டுகிறாராம் அந்த தெற்றுப் பல் நடிகை.