வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

80-களின் கனவுக்கன்னி நதியா.. முதல் படத்தில் எப்படி இருக்கிறார் பாருங்க!

1980களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை நதியா. இவருக்கு ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளும் ஏராளமாக இருந்தனர். அன்றைய காலகட்டத்தில் அவர் அணியும் உடை மற்றும் ஹேர் ஸ்டைல் பெண்களிடம் மிகவும் பிரபலம்.

நதியா 1985ல் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் துரு துரு கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பிறகு தமிழில் தொடர்ச்சியாக பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

புகழின் உச்சத்தில் இருக்கும் போதே 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு ரசிகர்களை அதிர்ச்சி ஆக்கினார். அதன்பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்த இவர் 1994 க்கு பிறகு அமெரிக்காவில் கணவருடன் செட்டிலாகிவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

நதியா 2004 ஆம் ஆண்டு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதே இளமையுடன் இருக்கும் நதியாவை பார்த்த ரசிகர்கள் அவர் அம்மா கேரக்டருக்கு பொருத்தமில்லை மீண்டும் ஹீரோயினாக நடிக்கலாம் என்று கூறினர்.

தற்போது தன் குடும்பத்தினருடன் மும்பையில் வசித்து வரும் நதியா தன்னுடைய முதல் மலையாள படத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த போட்டோவை பார்க்கும் ரசிகர்கள் நதியா எத்தனை வருடங்கள் ஆனாலும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார் என்று கமென்ட் கூறுகின்றனர். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

Trending News