Actress Nadiya: 80 காலகட்டத்தின் ட்ரெண்டிங் ஹீரோயின் என்றால் அது நதியா தான். அவருடைய நடிப்பும், அழகும் அன்றைய ரசிகர்களை கிறங்க வைத்தது. அது மட்டும் இன்றி அப்போதைய பெண்களுக்கு புது பேஷனை கற்றுக் கொடுத்ததும் இவர்தான்.

அதன்படி நதியா கொண்டை, நதியா கிளிப், நதியா டிரஸ் என அனைத்தும் பிரபலமாக இருந்தது. அதேபோல் நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே பிசியான நடிகையாக மாறிப் போனார்.

ஆனால் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலான அவர் சில வருட இடைவெளிக்குப் பிறகு அம்மா கேரக்டரில் என்ட்ரி கொடுத்தார். ஆனால் அவர் ஹீரோவுக்கு அம்மா என்று சொன்னால் யாராலும் நம்ப முடியாது.

இளமை மாறாத நதியா
அந்த அளவுக்கு அதே இளமையோடு அவர் இருந்தது தான் ஆச்சரியம். தற்போது அவருக்கு 57 வயது ஆகிறது. ஆனால் அதை சூடம் அடித்து சத்தியம் செய்து சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள்.
அந்த அளவுக்கு அவர் தன்னுடைய உடல் நலத்தை கவனித்துக் கொள்கிறார். கடைசியாக அவர் தமிழில் எல் ஜி எம் படத்தில் நடித்திருந்தார். அதை அடுத்து தற்போது அவர் பிரபலமான இடங்களை சுற்றி பார்ப்பதில் பிசியாக இருக்கிறார்.
அதன்படி தற்போது அவர் டிராவலில் இருக்கும் போட்டோ ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இயற்கை அழகை ரசிக்கும் நதியாவின் அந்த போட்டோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வைரலான நடிகைகளின் போட்டோக்கள்
- வயசானாலும் அழகும், கவர்ச்சியும் குறையாத 7 நடிகைகள்
- ஐட்டம் ரேஞ்சுக்கு போட்டோ வெளியிட்ட பிக்பாஸ் ரட்சிதா
- தேடி வந்த அரவணைத்த அஜித்தின் புகைப்படம்