Actress Namitha is going to divorce her romantic husband: குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட நமீதா எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பில்லா, அழகிய தமிழ் மகன் போன்ற வெற்றி படங்களில் அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
கிளாமர் குயின் ஆக பல படங்களில் தோன்றிய நமீதாவிற்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டார். பின்பு ஆந்திராவை சேர்ந்த வீரேந்திரசௌத்திரி என்பவரை ஏழு வருடங்களுக்கு மேல் காதலித்து 2017 ல் திருமணம் செய்து சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
2022 ஆண்டு இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அடிக்கடி தனது குழந்தைகளுடன் மற்றும் ஃபேமிலியுடன் புகைப்படம் எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் நமீதா. இதற்கிடையே தமிழக மக்களின் மீது அக்கறை கொண்டு “தமிழகத்தின் பிரச்சனை தீரணுமா! அப்போது தாமரை மலரனும்!” என்று ரைமிங்காக பேசி பிஜேபிக்கு ஆதரவாக அரசியல் களத்தில் இறங்கி வாக்குவேட்டையும் நடத்தினார்.
Also read: ரெண்டே ஹீரோக்களால் கேரியரை தொலைத்த நமீதா.. நம்பி பறிபோன சினிமா வாழ்க்கை
சமூக சேவை, பொதுப்பணி ஆற்றி கொண்டே குடும்பத்தையும் பேலன்ஸ் பண்ணி சந்தோஷமாக வாழ்ந்து வந்த நமீதாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவரது கணவரின் தவறான நடவடிக்கையின் காரணமாக பல இன்னல்களை சந்தித்து கொண்டிருந்தார். சேலத்தைச் சேர்ந்த ஒருவர் மோசடி வழக்கில் இவரது கணவரின் மீது வழக்கு தொடர்ந்தார்.
காதல் கணவரின் மூலம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருந்த நமீதாவிற்கு கூடுதல் போனஸ் ஆக போதை கடத்தல் பிசினஸ்மேன் ஒருவருடன் தவறான பழக்கத்தை மேற்கொண்டுள்ளார் எனவும், அவரின் பணத்தை கண்டு மயங்கி பல்வேறு தவறான வழிகளில் ஈடுபடுவதாகவும் அறிந்ததை அடுத்து விவாகரத்து செய்து விடலாம் என்று முடிவுக்கு வந்துள்ளாராம்.
இது பற்றி நமீதா அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை எனவும் ஆனால் நடந்த குற்றம் இதுதான் என்று சினிமா விமர்சகர் பயில்வான் பகிர்ந்துள்ளார். காதல் கணவரின் பணத்தாசையினாலும் தவறான நடவடிக்கைகளாலும் நமீதாவின் காதல் வாழ்வு இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.
Also read: ஆராரோ ஆரிரரோ பாட்டு பாடிய நமீதா.. கலகலப்பாக நடந்த வளைகாப்பு