வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தொடர்ந்து 11 படங்கள் பிளாப் கொடுத்த நயன்தாரா.. பட்டத்தை பறிக்க போகும் அந்த நடிகை

Actress nayanthara flop and upcoming movies in tamil cinema: சினிமாவில் நடிகைகளுக்கான முக்கியத்துவம் கடைபிடிக்கப்பட்டாலும் திருமணத்திற்கு பின் அவர்களால் முன்பு போல் ஜொலிக்க முடியவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. ஆனால் இதை பொய்யாக்கும் பொருட்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அதிக உத்வேகத்துடனும் நடித்தாலும் அவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெறவதில்லை என்பதுதான் கொடுமை.

15 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக தடம் பதித்திருக்கும் நயன்தாரா 2005 ஆண்டு ஐயா படத்தின் மூலம்  அறிமுகமானார். தனது கடின உழைப்பு மற்றும் திறமையால் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.

நிழல், அண்ணாத்தை என கடந்த சில ஆண்டுகளாக தொடர் தோல்விகளை கண்டு வரும் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் கதைக்கு சம்மதம் தெரிவித்து சமந்தாவையும் பரிந்துரைத்தார்.

காத்து வாக்குல ஒரு காதல் என்பதே அபத்தம் அதிலும் இரண்டு காதல் கதையை கவித்துவம் ஆக்க நினைக்கின்ற இயக்குனரை எப்படி பாராட்டுவது என்று தெரியாமல் ரசிகர்கள் விழி பிதுங்கி நின்றனர்.  காதலன் என்பதால் நயன்தாராவும் முட்டுக்கட்டை போடாமல் நடித்து இருக்கலாம் என்று தெரிந்தது.

Also read: அந்த கேரக்டர் பண்ணினது தப்பு என இதுவரை புலம்பும் 5 நடிகைகள்.. நயன்தாரா வெறுத்து ஒதுக்கிய படம்

இதற்குப் பின் விக்னேஷ் சிவனுடன் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார். நெற்றிக்கண், O2, கனெக்ட் போன்ற நடிகைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்த  சிறப்பம்சமிக்க கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தாலும் பிலாப்பாகி விடுகிறது.

தனி ஒருவன் ரேஞ்சுக்கு ஜெயம் ரவி நயன்தாரா கூட்டணியில் வெளிவந்த இறைவன் படத்தை எதிர்நோக்கி இருந்தனர் ரசிகர்கள். சைக்காலஜிக்கல் திரில்லர் படமான இறைவனின் திரைக்கதையில் கொடுக்கப்பட்ட அழுத்தம் மற்றும் விறுவிறுப்பற்ற தன்மை காரணமாக  படம் வெற்றி பெறவில்லை.

ஷங்கரின் உதவி இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த நயன்தாராவின் 75 ஆவது படம் அன்னபூரணி. தரமான கதையை வழக்கமான பார்முலாவில் வெளிப்படுத்தி விறுவிறுப்பை கூட்ட தவறி இருந்தது.இப்படியே போய்க் கொண்டிருந்தால் லேடி சூப்பர் ஸ்டார் காலியாகி விட வேண்டியதுதான். இவருக்கு அடுத்ததாக இருக்கும் திரிஷா பல படங்களில் கமிட் ஆகி இவரை ஓவர் டேக் செய்து போய் கொண்டு இருக்கிறார்.  படம் போய்விட்டது பட்டமும் போய்விட்டால் என்ன செய்வது?

அட்லியின் இயக்கத்தில் பாலிவுட்டை தெறிக்க விட்ட ஜவான் படத்தில் காவல்துறை அதிகாரியாக ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்து குறைந்த காட்சிகளில் நடித்திருந்தாலும் நிறைவான நடிப்பை தந்து அனைவரின் மனதையும் கவர்ந்திருந்தார் நயன்தாரா. தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த நயன்தாராவிற்கு ஜவான் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

தற்போது தனி ஹீரோயின் சப்ஜெக்ட் வேண்டாம் என்று முடிவு எடுத்து விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் எல்ஐசியிலும் மேலும் மாதவன் மற்றும் சித்தாத்துடன் சசிகாந்தின் டெஸ்ட் படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்த படத்தில் குமுதா என்கிற கேரக்டரில் எதார்த்தமாக நடித்ததற்காக நயன்தாராவை கொண்டாடுகிறார் இயக்குனர் சசிகாந்த். இப்படத்தை தனது பாத்திரத்தை நிறைவு செய்துள்ள நயன்தாரா குமுதா கதாபாத்திரத்தை மிஸ் பண்ணுவதாக வலைதளத்தில் உருகி உள்ளார்.

Also read: நயன்தாராவிற்கு அப்பாவாக நடிக்கும் அரசியல் புலி.. குடும்பச் சண்டையில் பிரதீப்

Trending News