திங்கட்கிழமை, பிப்ரவரி 10, 2025

டாட்டா காட்டிய டாப் ஹீரோக்கள்.. 73 வயது நடிகருடன் ஜோடி போடும் லேடி சூப்பர் ஸ்டார்

Nayanthara: தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் அத்தனை பேரும் சேர்ந்து மொத்தமாக நயன்தாராவுக்கு நாமம் போட்டு விட்டார்கள்.

கடந்த நான்கு வருடங்களாக நயன்தாரா அஜித், விஜய், ரஜினி, கமல் என எந்த ஒரு டாப் ஹீரோக்களின் புது பிராஜெக்ட்டிலும் இணையவில்லை. கிடைத்த வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய மார்க்கெட் மோசமான நிலைமையை அடைந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்ட நயன் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் ஓகே என்ற நிலைமையில் இருக்கிறார்.

73 வயது நடிகருடன் ஜோடி போடும் லேடி சூப்பர் ஸ்டார்

இந்த நிலையில் அக்கட தேசத்து ஹீரோ ஒருவர் நயன்தாராவுக்கு ஆதரவு கரம் நீட்டி இருக்கிறார். மலையாள சினிமாவுலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி தான் அந்த ஹீரோ.

ஏற்கனவே நயன்தாராவுடன் மூன்று படங்களில் மம்முட்டி ஜோடி சேர்ந்திருக்கிறார். இந்த நிலையில் MMMN (meaning a film by Anto Joseph Film Company, Mammootty, Mohanlal, Mahesh Narayanan) என்று குறிப்பிடப்படும் படத்தில் இணைந்திருக்கிறார்.

இந்த படத்தின் பெரிய பாசிட்டிவ் பல வருடங்களுக்குப் பிறகு மம்முட்டி மற்றும் மோகன்லால் இந்த படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். மேலும் இந்த படம் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்றும் சொல்லப்படுகிறது.

மம்முட்டி மற்றும் நயன்தாரா ஏற்கனவே ராப்பகல், பாஸ்கர் தி ராஸ்கல், புதிய நியமம் போன்ற படங்களில் இணைந்து நடித்திருந்தார்கள்.

ராப்பகல் படத்தில் இவர்கள் ஏற்று நடித்த கௌரி கிருஷ்ணன் கதாபாத்திரம் மலையாள சினிமா ரசிகர்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

இந்த படத்திற்குப் பிறகு மலையாள சினிமா நயன்தாரா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News