வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சம்பளத்துக்கும், பட்ஜெட்டுக்கும் வச்ச ஆப்பு.. அன்னபூரணிக்கு நாலா பக்கமும் சுத்தி அடிக்கும் கெட்ட நேரம்

Nayanthara lost her good name and top place in tamil cinema: தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம் ஸ்டாராகவே இருந்து கொள்கிறேன் என்று 10 கோடி மட்டும் சம்பளம் பெறுகிறார் இந்த தமிழ்நாட்டு மருமகள்.

சமீபத்தில் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் என்ட்ரி கொடுத்த  நயன் இனி அங்கும் கலக்குவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கணவர் கனவு கொண்டிருக்க வரிசையாக சறுக்கல்களை சந்தித்து வருகிறார் நயன்தாரா.

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியானது அன்னபூரணி. இயற்கையின் சூழ்ச்சியால் வெள்ள பாதிப்புகளால் அன்னபூரணியின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு, படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் வசூலில் பின்னடைவை சந்தித்தார் அன்னபூரணி.

Also Read: நயன்தாராவின் NO 1 இடத்திற்கு வந்த ஆப்பு.. கார்ப்பரேட் வைத்த செக், கதி கலங்கி போன பாக்ஸ் ஆபிஸ் கடவுள்கள்

படத்திற்கு சம்பளமாக தலா 10 கோடி பெறும் நயன்தாரா நடித்த அன்னபூரணி வசூலில் குறைந்த லாபத்தை அடைந்து தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டது. படத்திற்கான பிரமோஷன் போன்ற எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ளாது தலைக்கனத்துடன் இருந்து வருவதும் அவரின் சறுக்களுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களை தேர்ந்தெடுக்கும் நயன்தாராவின் அடுத்த படம் மண்ணாங்கட்டி. கோலமாவு கோகிலா போன்று நயன்தாரா முக்கியமான ரோலில் நடிக்க யோகி பாபு உடன் நடிக்கிறார். பெரும் பொருட் செலவில் உருவாகும் இப்படத்தின் போஸ்டரை அண்மையில் பட குழுவினர் வெளியிட்டனர்.

தமிழகத்தில் அன்னபூரணியின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் வெறும் 85 லட்சம் மட்டுமே வசூலித்தது படக் குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அன்னபூரணியின் சரிவு நயன்தாராவின் அடுத்த படமான மண்ணாங்கட்டியில் பிரதிபலித்து உள்ளது. மண்ணாங்கட்டி படத்தின் பட்ஜெட்காகவும் நயன்தாராவின் சம்பளத்திற்காகவும்  தயாரிப்பாளர் தரப்பில் நயன்தாராவிற்கு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். நயன்தாரா தனது சம்பளத்தை குறைக்கும் பொருட்டு மண்ணாங்கட்டி மண்ணாகி போகாமல் தடுக்கலாம்.

Also Read: நயன்தாரா இமேஜை காலி செய்யும் விக்கி.. ஆதிக்கத்தை அடக்கி பின்னப்பட்ட சூழ்ச்சி வலை

Trending News