பிசினஸ் மூளையை வைத்து நயன்தாரா செய்த தில்லாலங்கடி.. உங்க போதைக்கு நாங்க ஊறுகாவா?

Actress Nayanthara: சோசியல் மீடியா செலிபிரிட்டி என்று பார்த்தால் அது நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன் தான். அவர் ஒரு ட்வீட் போட்டாலே அது அடுத்த ஐந்து நிமிடத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகிவிடும். அப்படித்தான் கடந்த சில நாட்களாகவே அவர் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.

அதுவும் சமீபத்தில் அவர் நான் தொலைந்து விட்டேன் என சோகமாக ஒரு பதிவை போட்டிருந்தார். இதை பார்த்து பதறிப்போன ரசிகர்கள் செல்லத்துக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வந்தனர். ஏனென்றால் ஏற்கனவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவனை நயன்தாரா அன் ஃபாலோ செய்திருந்தது போல் காட்டியது.

உடனே நெட்டிசன்கள் நயன்தாராவுக்கு விவாகரத்து என ஒரு வதந்தியை கிளப்பி விட்டனர். அதன் பிறகு தான் அது டெக்னிக்கல் பிரச்சனை என தெரிய வந்தது. மேலும் விக்கியும் நயனுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Also read: பிசினஸ்-க்கு மேல் பிசினஸ் தொடங்கும் நயன்.. அம்பானி, அதானியை மிஞ்சிடுவாங்க போலையே!

ஆனால் சில தினங்களில் நயன்தாரா இப்படி ஒரு பதிவை போட்டு மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தார். அதையடுத்து மீண்டும் விவாகரத்து செய்தி சூடு பிடித்தது. ஆனால் இது அனைத்தும் விளம்பர யுக்தி என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

நடிப்பை தாண்டி பிசினஸில் கலக்கிக் கொண்டிருக்கும் நயன் தற்போது ஸ்லைஸ் குளிர்பான கம்பெனியின் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவருக்கு கோடி கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து அந்த குளிர்பானத்தை விளம்பரப்படுத்தும் விதமாக தான் அவர் அந்த பதிவை போட்டு இருக்கிறார்.

அந்த மேங்கோ ஜூஸின் சுவையில் நான் தொலைந்து விட்டேன் என்பதை தான் அம்மணி நாசுக்காக போட்டிருக்கிறார். ஆனால் அது தெரியாமல் ரசிகர்கள் விவாகரத்து என ஒரு செய்தியை பரவ விட்டு பூகம்பத்தை ஏற்படுத்தி விட்டனர். இதை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த நயன்தாராவும் எல்லாமே பப்ளிசிட்டி தானே என இந்த சர்ச்சையில் குளிர் காய்ந்திருக்கிறார்.

Also read: விக்னேஷ் சிவன் உடன் விவாகரத்தா.? சர்ச்சையை கிளப்பும் நயனின் இன்ஸ்டா ஸ்டோரி