புதன்கிழமை, ஜனவரி 22, 2025

லேடி சூப்பர் ஸ்டாரை இயக்கும் யூடியூபர்.. இணையத்தை கலக்கும் அடுத்த பட அப்டேட்

Nayanthara Next Movie Update: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருக்கும் நயன்தாரா தற்போது அட்லி இயக்கும் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார். இந்த படத்தின் டிரைலர் விரைவில் ரிலீஸ் ஆகப்போகிறது. படத்தை செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சினிமாவில் சுமார் 20 ஆண்டு காலமாக டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டுக் கொண்டிருக்கும் நயன்தாரா, தன்னுடைய 75-வது படத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்கப் போகிறார். அந்த படத்தை ஷங்கரின் உதவி இயக்குனரான நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். இதில் இவருடன் ஜெய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு பிறகு நயன்தாராவின் அடுத்த படத்தை பிரபல யூடியூபர் இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட்டாகி கொண்டிருக்கிறது.

Also Read: தந்தையர் தினத்தில் அட்ராசிட்டி செய்த 5 பிரபலங்கள்.. உயிர், உலகத்தை தோளில் ஏற்றிய விக்னேஷ் சிவன்

நயன்தாரா தற்போது பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பிரபல யூடியூபர் ட்யூட் விக்கி இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்தப் படம் முழுக்க முழுக்க பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைக்களத்தை கொண்டது. இந்த படத்தின் அறிவிப்பை தற்போது தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளது.

படத்திற்கு வரும் 14-ம் தேதி பூஜை போடப்பட்டு, சூட்டிங் விரைவில் துவங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மாயா, அறம், கோலமாவு கோகிலா போன்ற படங்களில் பெண்களை மையமாக வைத்து நயன்தாரா நடித்து கலக்கினார். அந்த வகையில் இந்த படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: 2023 டாப் லிஸ்டில் இடம் பெற்ற 10 ஹீரோயின்கள்.. நயனை ஓரங்கட்ட எல்லை மீறிய சமந்தா

அது மட்டுமல்ல இந்த படத்தின் தயாரிப்பாளர் லட்சுமன் குமாரும் படத்தின் இயக்குனர் யூடியூபர் ட்யூட் விக்கி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், யூடியூப் மூலம் பேமஸான ட்யூட் விக்கிக்கு இந்த படம் ஜாக்பாட் அடித்தது போல் சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறார்.

இவரை இயக்குனராக நயன்தாரா தேர்வு செய்வதற்கு முக்கிய காரணம் கதைதான். அவர் சொன்ன கதை நயன்தாராவிற்கு மிகவும் பிடித்து போனதால், அதில் நடித்து விட உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இந்தப் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்க தயாரிப்பு நிறுவனம் முழு வீச்சில் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது.

Also Read: ஹீரோவுக்கு நிகராக தனித்து நின்ற நயன்தாரா.. அலறவிட்ட 5 படங்களின் வசூல் விவரம்

Trending News