திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காதல் கணவருக்கு ஏற்பட்ட அவமானம்.. நயன்தாரா எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் திரையுலகம்

நடிகை நயன்தாரா ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் கைக்குள் வைத்திருக்கிறார் என்று சொன்னால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. நயன்தாரா சும்மா இருந்தாலும் அவரைப் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஹாட்டாக தான் இருக்கும். அப்படித்தான் இப்போது அவரது கணவர் விக்னேஷ் சிவனால் ட்ரெண்ட் ஆகி இருக்கிறார் நயன்தாரா.

நயன்தாராவை வைத்து தான் விக்னேஷ் சிவனின் சினிமா வாழ்க்கை என்பது கோலிவுட் வட்டாரங்களில் எப்போதும் பேசப்படும் ஒன்றுதான். ஆனால் அதை உண்மைப்படுத்தும் விதமாக வெளிவந்த விஷயம் தான் ஏகே 62 சர்ச்சை. நடிகை நயன்தாராவின் சிபாரிசின் பேரில் நடிகர் அஜித் தன்னுடைய 62 ஆவது படத்தை இயக்குவதற்கு விக்னேஷ் சிவனுக்கு ஓகே சொல்லி இருக்கிறார்.

Also Read: ஐஸ்வர்யாவுடன் ஒர்க் அவுட் செய்யும் நயன்தாராவின் எக்ஸ் காதலன்.. கொலவெறியில் தனுஷ்

அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏகே 62 வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. கிட்டத்தட்ட அஜித் ஒரு வருட காலம் விக்னேஷ் சிவனுக்கு நேரம் கொடுத்திருந்தார். ஆனால் ஒரு வருடத்தில் விக்னேஷ் சிவன் ரெடி பண்ணி இருந்த கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை. இதனால் விக்னேஷ் சிவன் இந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கிய அத்தனை திரைப்படமும் நயன்தாராவின் சிபாரிசில் நடந்தது தான். இதுதான் முதன்முறையாக நயன்தாராவின் பேச்சு எடுபடாமல் போன விஷயம். அஜித் எப்படியும் ஓகே சொல்லிவிடுவார் என்று எண்ணத்தில் நயன்தாராவும் மாற்றி மாற்றி ஏகே 62 தயாரிப்பாளருக்கும், நடிகர் அஜித்துக்கும் போன் செய்து பார்த்திருக்கிறார். ஆனால் இறுதி வரை அஜித் ஓகே சொல்லவே இல்லை.

Also Read: ட்ரான்ஸ்பரண்ட் புடவை , மல்லிப்பூ என குடும்ப குத்து விளக்காக மாறிய நயன்தாரா.. மறைமுகமாக விக்கிக்கு சொன்ன அட்வைஸ்

இந்த வாய்ப்பு மட்டும் விக்னேஷ் சிவனுக்கு கிடைக்கவில்லை என்றால் அவருடைய சினிமா வாழ்க்கையே போய்விடும் என்று கூட சொல்லிப் பார்த்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் அவர் பேசுவதை அஜித் மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் கண்டு கொள்வதாய் இல்லை. இதனால் தற்போது நடிகை நயன்தாரா நடிகர் அஜித் மீது செம கடுப்பில் இருக்கிறாராம்.

இதனால் இனி நடிகர் அஜித்தின் திரைப்படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று முடிவு எடுத்திருக்கிறாராம் நயன்தாரா. இதெல்லாம் எத்தனை நாளுக்கு செல்லுபடியாகும் என்று தெரியவில்லை. சம்பளம் கொஞ்சம் அதிகமா கொடுத்தால் கண்டிப்பாக நயன்தாரா நடித்து விடுவார் என்றும், விக்கியின் கதையில் எதுவுமே இல்லை என்பதால் தான் அஜித் அவரை நிராகரித்தார், அதை இப்படியெல்லாம் பேசி சமாளித்து வருகிறார் நடிகை நயன்தாரா என்றும் சொல்லி வருகின்றனர்.

Also Read: விக்னேஷ் சிவன் போல் மகிழ்திருமேனிக்கும் வரும் ஆப்பு.. ரீ என்ட்ரி இயக்குனர்களுடன் பேச்சுவார்த்தையில் லைக்கா

Trending News