வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

பிசினஸ்-க்கு மேல் பிசினஸ் தொடங்கும் நயன்.. அம்பானி, அதானியை மிஞ்சிடுவாங்க போலையே!

Nayanthara new business: சினிமாவை பொறுத்த வரைக்கும் வாய்ப்பிருக்கும்போது சம்பாதிப்பது ஒரு கலை என்றால், சம்பாதித்த பணத்தை பல மடங்கு ஆக்குவது என்பது கைதேர்ந்த வித்தை. இதில் பெரும்பாலான கலைஞர்கள் தோற்றுவிடுவதால்தான் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் ஒடுங்கிப் போய் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் எல்லோருக்கும் பாடம் கற்றுக் கொடுத்து விடுவார் போல நடிகை நயன்தாரா.

ஒரு பக்கம் பாலிவுட் உலகில் நம்பர் ஒன் நடிகையாக மாறுவதற்கு அடித்தளம் போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், அடுத்தடுத்து தொழில் முதலீட்டிலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். சினிமாவில் திருமணத்திற்குப் பிறகு தனக்கு மவுசு குறைந்து விட்டதை உணர்ந்த நயன்தாரா, பிரபலமாக இருக்கும் பொழுதே அடுத்தடுத்து தொழில் தொடங்கி பிசினஸ் வுமனாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள திட்டமிட்டு விட்டார்.

2020 ஆம் ஆண்டு சாய் வாலா தேநீர் பிசினஸில் முதல்முறையாக களம் கண்ட நயன்தாரா தொடர்ந்து லிப் பாம் தொழிலை தொடங்கினார். அதைத்தொடர்ந்து திருமணம், குழந்தைகள் என செட்டிவிலான நயன் சமீபத்தில் 9 ஸ்கின் என்னும் பெயரில் அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் கம்பெனியை தொடங்கி இருப்பதோடு, திரை நட்சத்திரங்களின் மூலம் தன்னுடைய கம்பெனிக்கு வேற லெவலில் பிரமோஷன் செய்து வருகிறார்.

Also Read:நயன்தாரா பட கதையை காப்பி அடித்த மஞ்சுமல் பாய்ஸ்.. வசூலில் மிரட்டும் திரில்லர்

மேலும் கடந்த விஜயதசமி தினத்தன்று ஃபெமி 9 என்னும் இயற்கை முறையில் தயாரிக்கும் நாப்கின் பிசினஸ் செய்யும் தொடங்கி இருந்தார். மேலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை வியாபாரம் செய்யும் டிவைன் ஃபுட்ஸ் என்னும் கம்பெனியிலும் முதலீடு செய்திருக்கும் நயன்தாரா இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஸ்லைஸ் கூல்டிரிங்ஸ் பிசினசின் பிராண்டு அம்பாசிடராக மாறி இருக்கிறார்.

மாம்பழம் பிளேவரில் வரும் இந்த ஸ்லைஸ் கூல்டிரிங்ஸ் பல வருடங்களாக இந்தியாவில் நல்ல வியாபாரத்தில் நடந்து வருகிறது. பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் இந்த நிறுவனத்திற்கு பிராண்டு அம்பாசிடராக இருந்து வந்த நிலையில் தற்போது ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டு உலகத்தில் தடம் பதித்திருக்கும் நயன்தாராவை பிராண்டு அம்பாசிடராக ஆக்கி அழகு பார்த்திருக்கிறது ஸ்லைஸ் நிறுவனம்.

ஒரு பிசினஸை தொடங்கி லாபம் பார்ப்பதற்குள்ளேயே டங்குவார் அவிழ்ந்து விடும். ஆனால் நடிகை நயன்தாரா ஒரு வருட காலத்திற்குள் அடுத்தடுத்து நிறைய பிசினஸ்களை தொடங்கி நடத்தி வருகிறார். போரப்போக்கில் நயன்தாரா பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக மாறுகிறாரோ இல்லையோ, பிசினஸில் அம்பானி மற்றும் அதானியை தூக்கி சாப்பிடும் அளவுக்கு கைதேர்ந்து விடுவார் போல.

Also Read:வாய்ப்பு கொடுத்த தனுசையே பதம் பார்த்த நயன்தாரா.. மேடை ஏறி அசிங்கப்பட்டது தான் மிச்சம்

Trending News