Nayanthara: முன்னணி நடிகைகளை படங்களில் நடிக்க வைப்பது என்பது இப்போது தயாரிப்பாளர்களுக்கு பெரிய தலைவலியாக ஆகிவிட்டது. அதனால் தான் நிறைய இளம் நடிகைகளை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வந்து தமிழ் சினிமாவில் நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.மொறு சில தயாரிப்பாளர்கள் முன்னணி நடிகைகளை படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என முயற்சி செய்து தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துக் கொள்கிறார்கள்.
அப்படி சமீப காலமாக தயாரிப்பாளர்களுக்கு பெரிய தலைவலியாக ஆகியிருக்கிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவுக்கு கடந்த இரண்டு வருடங்களாக பெரிய அளவில் மார்க்கெட் எதுவும் இல்லை. பாலிவுட் உலகை நம்பி, தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இப்போது தன்னுடைய இடத்தை த்ரிஷாவுக்கு தாரை வார்த்து விட்டார். இருந்தாலும் அவருடைய பழைய பெயரை வைத்து படங்களை ஓட்டி விடலாம் என்ற ஆசையில் தயாரிப்பாளர்கள் நடிக்க வைக்கிறார்கள்.
மார்க்கெட் இல்லை என்றாலும் சம்பளத்தை 10 கோடியில் இருந்து குறைக்க மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. இதனாலேயே ஒரு படத்தின் பட்ஜெட் தொகையின் பெரும் பகுதி அவருடைய சம்பளமாக இருக்கிறது. அதையும் தாண்டி தயாரிப்பாளர்களுக்கு நயன்தாரா கொடுக்கும் இடஞ்சல்கள், ரொம்பவும் ஓவராக இருக்கிறது.
அதாவது எந்த படத்தில் நடித்தாலும் சென்னையில் மட்டுமே ஷூட்டிங் நடத்த வேண்டும் என்று சொல்கிறாராம். இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அவருடைய குழந்தைகள். குழந்தைகளை வீட்டிலிருந்து நான் பார்த்துக் கொள்ள வேண்டும், அதனால் சூட்டிங் சென்னையில் மட்டும் தான் நடக்க வேண்டும் என ஆர்டர் போடுகிறாராம்.
தயாரிப்பாளர்களுக்கு செலவை இழுத்து விடும் நயன்தாரா
வேறு ஏதாவது லொகேஷனில் காட்சிகள் எடுக்க வேண்டும் என்று சொன்னால் அந்த செட்டை சென்னையில் போடுங்கள் என்று சொல்கிறாராம். இவருக்கு 10 கோடி சம்பளம் கொடுப்பது போதாது என்று, சென்னையில் அதே மாதிரி செட்டுகளை போடுவதற்கு வேற தயாரிப்பாளர்கள் கோடி கணக்கில் செலவு பண்ண வேண்டியது வருகிறதாம். குறிப்பிட்ட டைமிங்கில் நடித்துக் கொடுத்துவிட்டு உடனே வீட்டுக்கு போக வேண்டும் என்று வேறு பேக்கப் செய்து விடுகிறார்.
எல்லாம் போதாது என்று நயன்தாராவுக்கு வாழ்த்துக்கள் மட்டும் மொத்தம் 10 பேராம். இவர்களுக்கு சம்பளம் மட்டுமே தனியாக இரண்டு கோடி ஆகிறது. அந்த பணத்தையும் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து தான் கொடுக்க வேண்டும். போதாத குறைக்கு காதல் மனைவியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்னும் இரண்டு பவுன்சர்கள் வேண்டுமென்று சொல்லி அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்.