வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

உங்க மேல வச்சிருந்த மதிப்பே போச்சு.. குடும்ப குத்து விளக்கு நஸ்ரியாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

மலையாள படமான பளிங்கு படத்தின் மூலம் கடந்த 2006 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், அட்லி இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் தமி திரை உலகிற்கு வந்த நஸ்ரியா. தமிழில் மட்டுமில்லாமல் இவர் மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

பின் தனுஷின் நையாண்டி படத்திலும் நடித்த நஸ்ரியா, வாயை மூடி பேசவும், பெங்களூர் டேஸ், திருமணம் எனும் நிக்கா போன்ற படங்களிலும் நடித்தார். அதன்பின் ஓரிரண்டு படங்களில் தலை காட்டினாலும் அதன்பின் சினிமாவிற்கு முழுக்கு போட்டதால் அவருடைய ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.

சினிமாவுக்கு வந்த ஒரே ஆண்டில் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவர் தனது 19 வயதிலேயே சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்த நஸ்ரியா தன்னுடைய கணவர் கணவர் பகத் பாசிலுடன் ஒரு படத்தில் ஜோடி போட்டு என்ட்ரி கொடுத்துள்ளார்.

சினிமாவில் செகண்ட் இன்னிங்சை துவங்கியிருக்கும் நஸ்ரியா அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறார். அத்துடன் இவர் நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் இவருடைய கெட்டப் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

நஸ்ரியா தன்னுடைய கணவருடன் டிரான்ஸ் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் புகை பிடிப்பது போல் உள்ள காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குடும்ப குத்துவிளக்காக அடுத்த நஸ்ரியாவா இப்படி ஆகிவிட்டார் என்று அனைவரும் உச்சிக் கொட்டி வருகின்றனர்.

actress-nazriya-cinemapettai
actress-nazriya-cinemapettai

இந்த புகைப்படத்தில் நஸ்ரியா வாயில் சிகரெட்டுடன் பார்த்தபிறகு, நம்ம நஸ்ரியாவா இது! என சில ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். டிரான்ஸ் படத்தில் நஸ்ரியா, பகத் பாசில் உடன் மட்டுமின்றி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Trending News