செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

கல்யாணம் ஆயிடுச்சுபா, இனி முத்தம், ரொமான்ஸ் எதுவும் வேண்டாம்.. 26 வயது நடிகை போடும் கண்டிஷன்

சினிமாவுக்கு வந்த ஆரம்பத்திலேயே மளமளவென முன்னணி நடிகையாக வளர்ந்த நடிகை ஒருவர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஒரு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்குமே அதிர்ச்சி தான்.

சுட்டி குழந்தை போல் இருக்கும் அந்த நடிகையின் செயல்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. மேலும் அந்த நடிகைக்கு எக்ஸ்பிரஷன் குயின் எனவும் செல்லப் பெயர் வைத்து அழைத்து வந்தனர்.

மிக இளம் வயதிலேயே தன்னை விட வயது அதிகமான நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார். இத்தனைக்கும் அவரது கேரியரில் உச்சத்தில் இருந்த நேரமது.

இருந்தாலும் சினிமாவை பெரிதும் பொருட்படுத்தாமல் தன்னுடைய இல்லற வாழ்க்கையில் கவனம் செலுத்திய நடிகை சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இன்னும் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் மற்ற மொழிகளில் ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த நடிகையின் கணவரும் மிகப்பெரிய நடிகர் தான். திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பதாக கூறிய அந்த நடிகையிடம் பெரும்பாலும் ரொமான்ஸ் மற்றும் முத்தக்காட்சிகள் சம்பந்தப்பட்ட கதைகளே அதிகம் செல்கிறதாம்.

இதனை பார்த்த நடிகை திருமணம் ஆகிவிட்டது என்பதால் இனி முத்தக்காட்சி ரொமான்ஸ் காட்சி போன்றவற்றில் நடிப்பதில்லை என முடிவெடுத்து விட்டேன், அதுதான் என்னுடைய கண்டிஷன் எனவும் இயக்குனர்களை சோகத்தில் ஆழ்த்தி விட்டாராம். இதனால் தங்களுடைய கற்பனைத்திறன் வீணாகி விட்டதே என கவலையில் திரும்பி வருகிறார்களாம் நம்ம ஊரு இயக்குனர்கள்.

Trending News