வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

14 கிலோ எடையை குறைத்த பப்ளிமாஸ் நித்யா மேனன்.. புகைப்படத்தைப் பார்த்து இளகும் இளசுகள்!

கவர்ச்சியை காட்டாமலும், உச்ச நாயகியாக ஜொலிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்தான் நித்யாமேனன். மேலும் நித்யா தனது சிறந்த நடிப்பாற்றலால், முன்னணி நடிகர்களுக்கு இணையான ரசிகர்களை பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் கெத்து காட்டி வருகிறார். தற்போது நித்யாமேனன் விஜய் சேதுபதியுடன் இணைந்து 19 (1)(a) என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.

இந்த நிலையில் நித்யா மேனன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் கிறுகிறுக்க செய்துள்ளது. ஏனென்றால் புசுபுசுவென்று இருந்த நித்யா மேனன் இந்த புகைப்படத்தில் மெல்லிய உடல் தோற்றத்தைப் பெற்று ஸ்லிம்மாக இருக்கிறார்.

actress-nithyamenen-cinemapettai

அதாவது தமிழ் சினிமாவில் வெப்பம் 180 போன்ற படங்களின் மூலம் கால்பதித்த நித்யாமேனன், தனது தனித்துவமான நடிப்பாற்றலின் காரணமாக விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்.

nithyamenen-cinemapettai

இவ்வாறு இருக்க தற்போது நித்யா மேனன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் சோபாவில் அமர்ந்து இருப்பது போல் வெளியிட்டிருக்கும் புகைப்படம், இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.

மேலும் இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் நித்யாமேனனின் அழகை வர்ணித்து கொண்டிருக்கின்றனர்.

Trending News