வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

ரொமான்ஸ் சீன் வேண்டவே வேண்டாம்.. அலறும் முன்னணி நடிகை

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே காதலித்த நடிகரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானவர் தான் அந்த நடிகை. திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிக்க கூடாது என புகுந்த வீட்டில் கண்டீசன் போட்டதால் சில காலம் அந்த நடிகை படங்களில் தலை காட்டாமல் இருந்தார்.

அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து நடிப்பதற்கு கிரீன் சிக்னல் காட்டியதால் ஒரு மலையாள படத்தில் தமிழ் ரீமேக் மூலம் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெறவே தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவரது கம்பேக் வெற்றியாகவே அமைந்தது.

அதேபோல் நடிகையும் கதைகளை கவனமாகவே தேர்வு செய்து நடித்து வந்தார். குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தான் நடிகை அதிகளவில் நடித்து வந்தார். அதற்கேற்ப இவரது படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

உச்சத்தில் இருந்த போது நடிகைக்கு எந்தளவிற்கு ரசிகர்கள் இருந்தார்களோ அதே ரசிகர்கள் தற்போதும் நடிகைக்கு உள்ளார்கள் என்பது தான் சிறப்பு. இந்நிலையில் சமீபகாலமாக படங்களில் கதாநாயகர்களுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்க நடிகை மறுக்கிறாராம்.

மேலும், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் டூயட் எல்லாம் வைக்காதீர்கள். அதை இப்ப ரசிகர்கள் விரும்புவதில்லை என்கிறாராம். அதுபோல் ஆபாச காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம்.

திடீரென நடிகை இப்படி கூற காரணம் என்ன என்று விசாரித்தால் நடிகையின் கணவர் வீட்டார் கொடுக்கும் அழுத்தம் தான் என்கிறார்கள். புகுந்த வீட்டில் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க கூடாது என மிகவும் கறாராக கூறிவிட்டார்களாம். அதனால் தான் நடிகை இந்த முடிவை எடுத்துள்ளதாக கோலிவுட்டில் கிசு கிசுத்து வருகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News