சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஷகிலா போல் அந்தரங்க காட்சியில் நடிக்க மறுத்த நடிகை.. கோடியில் கொடுத்தாலும் செய்ய மாட்டேன்

தமிழ் சினிமா எத்தனையோ கதாநாயகிகளை பார்த்துள்ளது. அவர்கள் சிறிது காலம் மட்டுமே உச்சத்தில் இருப்பவர்கள். ஆனால் ஒரு கவர்ச்சி நடிகையை இன்றளவும் தமிழ் ரசிகர்களால் மறக்கவும் முடியவில்லை. அவர்தான் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. நூறு வருட தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் கவர்ச்சியாக நடித்த போதும் தன்னுடைய காந்த கண்களாலும், கவர்ச்சி பாவனையாளும், நடனத்தால் இன்றுவரை நம் நினைவில் இருப்பவர் சில்க்.

அவரைக் கவர்ச்சி நடிகை என்று கூறினாலும் இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் தனது நடிப்பு திறமையை காட்டியுள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் அவரது நடிப்பை எம் ஜி ஆர் பாராட்டியுள்ளார். அந்தக் காலத்தில் சில்க்கின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.

மலையாள திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்றவர்களுடன் நடித்துள்ளார். தமிழில் நடிப்பதை விட மலையாளத் திரைப்படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவாராம் சில்க்ஸ்மிதா. காரணம் அங்கு ஒரு திரைப்படத்திற்கான கால்ஷீட் மிகவும் குறைவு.

அதனால் மலையாளத் திரைப்படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். மலையாளத்தில் நடிகை ஷகிலாவை போல் இவரையும் அங்கு நடிக்க வைக்க எவ்வளவோ முயற்சிகள் நடைபெற்றது. ஆனால் சில்க் அது போன்ற திரைப்படங்களில் நடிக்க மறுத்துவிட்டார்.

சில்க் ஸ்மிதா படத்திற்காக எவ்வளவு கவர்ச்சி வேண்டுமானாலும் காட்டுவேன். ஆனால் இது போன்ற திரைப்படங்களில் ஒரு போதும் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாராம். இதற்காக இவருக்கு அதிக சம்பளம் வழங்கப்படும் என்று கூறியும் அதையெல்லாம் காதில் கூட வாங்கவில்லை. ஏனென்றால் சிலுக்கு அவர்களுக்கு எப்போதும் பணத்தின் மீது ஆசை இல்லையாம்.

இதனால் அவர் சம்பாதித்த சொத்துக்களை உதவி என்று கேட்டு வருவோருக்கு கொடுத்து விடுவாராம். தற்போதுவரை கவர்ச்சி நடிகையாக மட்டும் தான் ரசிகர்களுக்கு தெரியும் ஆனால் நிஜமாகவே வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது என்பது போன்று வாழ்ந்து வந்துள்ளார் சில்க் ஸ்மிதா.

Trending News