தமிழ் சினிமாவின் வாழ்ந்து வரும் கடவுள் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பிரபல நடிகரின் மகள் சமீபகாலமாக தயாரிப்பாளர்களை படாதபாடு படுத்தி வரும் சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அந்த நடிகைக்கு தாய்மொழி தமிழ்தான். ஆனால் பிரபலம் ஆனது என்னவோ அக்கட தேசத்தில் தான். அக்கட தேசத்தில் இந்த நடிகை காட்டும் கவர்ச்சியை கண்டு மிரண்டு போகாத ஆளே கிடையாதாம். நடிகையும் பார்க்க மப்பும் மந்தாரமுமாக இருப்பாராம்.
அநியாயத்திற்கு முன்னாடி தெரியும்படி இறக்கமான உடையில் குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்டால் யார்தான் ரசிக்க மாட்டார்கள். அப்படி அக்கட தேசத்தில் இருந்து வட இந்தியாவுக்குச் சென்று அப்படியே தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் ஒருவரின் மிகப்பெரிய படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட அந்த நடிகை திடீரென வெளிநாட்டு புகைப்படக் கலைஞர் ஒருவருடன் காதலில் விழுந்தார். டேட்டிங் எல்லாம் முடித்துக்கொண்டு அந்த வெளிநாட்டு பையன் நடிகையை கைகழுவி விட்டார்.
இதனால் போதைக்கு அடிமையாக இருந்த அந்த நடிகை கடந்த சில வருடங்களாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் தனிமையிலேயே இருந்து வந்தாராம். தற்போது அதிலிருந்து மீண்டுவர அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
ஆனால் முன்னர் போல் அந்த நடிகைக்கு பெரிய அளவு வாய்ப்பு இல்லையாம். கிடைக்கும் சின்ன சின்ன படங்களில் கூட பந்தா காட்டி தயாரிப்பாளர்களை கடுப்பாக்குறாராம். ஹோட்டல் அறையில் ஆயிரத்தெட்டு குறைகள் சொல்லுவது, கேரவன் அடாவடி என நடிகையின் அட்டகாசம் தாங்க முடியவில்லையாம்.
இதை யாரிடமாவது சொல்லலாம் என்று பார்த்தால் நடிகையோ பெரிய இடத்து வாரிசு நடிகை. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து வருகிறார்கள் அந்த நடிகையை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள்.