செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கவர்ச்சி காடாக மாறிய பூனம் பஜ்வா.. 36 வயதில் இவ்வளவு அழகா!

2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கி, அதன் பிறகு 2008ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை பூனம் பஜ்வா. அதன்பிறகு இவர் கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, தெனாவட்டு என வரிசையாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின் மார்க்கெட்டை இழந்த பூனம் பஜ்வா, சின்னச்சின்ன கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இந்நிலையில் 36 வயதான பூனம் பஜ்வா தற்போது சமூக வலைதளங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கலங்க வைக்கிறார். அத்துடன் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் குட்டி டவுசரில் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்தபடி விதவிதமான அங்கிள்களில் போட்டோ ஷூட் எடுத்துள்ளார்.

அத்துடன் இந்த புகைப்படத்தில் பூனம் பஜ்வா கவர்ச்சி காடாகவே மாறி உள்ளார். எனவே இவருடைய இந்த புகைப்படத்திற்கு இன்ஸ்டாகிராமில் எக்கச்சக்கமான லைக்குகளும் கமெண்டுகளும் வந்து குவிகிறது.

poonam-cinemapettai11
poonam-cinemapettai

பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து, கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் பூனம் பாஜ்வா கடந்த சில ஆண்டுகளாக இணையத்தை சூடேற்றும் விதத்தில் போட்டோஸ்களை பதிவிடுகிறார்.

poonam-bajwa-cinemapettai
poonam-bajwa-cinemapettai

இருப்பினும் இவர் எதிர்பார்க்கும் அளவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. எனவே அவ்வப்போது தன்னுடைய ஆண் நண்பருடன் எடுக்கும் புகைப்படத்தையும் சோஷியல் மீடியாவில் உலாவ விடுவதால், பூனம் பஜ்வா விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

எனவே உடல் எடையை இளைத்து சிக்குன்னு இருக்கும் பூனம் பஜ்வா சினிமா பயணத்தை தொடர்வாரா? அல்லது திருமண வாழ்க்கையை தேர்ந்தெடுத்து சினிமாவிற்கு முழுக்கு போட்டு விடுவாரா? என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு தொடங்கி உள்ளது.

Trending News