சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஓவரா கண்டிஷன் போட்ட கணவர்.. திருமணமான பத்தே நாளில் பொட்டியை தூக்கிட்டு கிளம்பிய நடிகை

சமீபகாலமாக சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு சீக்கிரமாக திருமணம் ஆகிறதோ இல்லையோ, வெகு விரைவில் விவாகரத்து நடைபெற்று விடுகிறது. இளம் நடிகைகள் முதல் மூத்த நடிகைகளை விவாகரத்து வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல. மொத்த உலக சினிமாவிலுள்ள நடிகைகளின் நிலைமை இப்படித்தான். ஆசைப்பட்டு திருமணம் செய்து கொள்வது, பிறகு கணவரின் கண்டிஷன் தாங்க முடியவில்லை என பாதியிலேயே பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விடுவது.

அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் நடிப்பில் வெளியான லைப் ஆப் ஜோசுகுட்டி என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் தான் ரச்சனா நாராயணகுட்டி. மலையாளத்தில் பிரபல நடிகையான இவருக்கு தற்போது வயது 37 ஆகிறது. துணை நடிகையாக மலையாள சினிமாவில் நீண்ட நாட்களாக நடித்து வந்தவர் 2013ஆம் ஆண்டு ஜெயராம் நடிப்பில் வெளியான லக்கி ஸ்டார் படம் தான் நாயகியாக முதல் படம். ஆனால் வெற்றி படம் என்றால் அது லைஃப் ஆப் ஜோசுகுட்டி தான்.

ஆங்கில டீச்சராக இருந்து பின்னர் சீரியலில் கிடைத்த சின்ன சின்ன வாய்ப்பை பயன்படுத்தி தற்போது மலையாள சினிமாவில் கவனிக்கப்படும் நாயகியாக வலம் வரும் ரச்சனா நாராயணகுட்டி 2011ம் ஆண்டு குடும்பத்தினரால் பார்க்கப்பட்ட மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார்.

rachana-narayanakutty-cinemapettai
rachana-narayanakutty-cinemapettai

மேலும் அர்ச்சனாவுக்கு நடனத்தின் மீது பெரிய ஆர்வம் இருக்கிறதாம். இதனால் சினிமாவில் நடனம் கற்றுக்கொடுக்க நடிகர்கள் மற்றும் நடிகைகள் கூட பழக வேண்டி இருந்ததாம். ஆடின காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்று சொல்வார்களே. அப்படித்தான். நான் நடனம் சொல்லிக் கொடுக்கப் போகிறேன் என நாயகி கூற, வீட்டிலேயே இரு என கணவன் சொல்ல, வந்தது பஞ்சாயத்து. முடிவு விவாகரத்து.

திருமணமான 10 நாளிலேயே விவாகரத்து வரைக்கும் போனது அனைவருக்குமே வருத்தம்தான். இதன் மூலம் ரோசம் உள்ளவர்கள் திருமணம் செய்யக்கூடாது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்துவிட்டது. இருந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்து பார்த்திருந்தால், ஒருவேளை இருவரும் புரிந்து கொண்டிருப்பார்களோ என்னமோ.

Trending News