திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ராதிகாவால் தேசிய விருதை இழந்த ராதா.. கஷ்டப்பட்டு நடிச்சும் என்ன பிரயோஜனம்

ஒரு கிராமத்து பின்புலத்தை மண் மணம் மாறாமல் திரைக்கதை அமைத்து அதில் வெற்றியும் கண்டவர் இயக்குனர் பாரதிராஜா. இவருடைய இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் காலம் கடந்தும் நம் நினைவை விட்டு நீங்காதவை.

ஒவ்வொரு இயக்குநருக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ஒரு படத்திலாவது இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி நடித்த திரைப்படம் முதல் மரியாதை. இந்த படத்தில் அவருடன் இணைந்து நடிகை ராதா, வடிவுக்கரசி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

200 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மிக பெரிய சாதனையை படைத்தது . அதுமட்டுமல்லாமல் இப்படம் தேசிய விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை தட்டிச் சென்றது. இதில் சிவாஜி கணேசனுக்கு இணையாக குயில் என்ற கேரக்டரில் நடித்திருந்த நடிகை ராதாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

பாரதிராஜா கண்டுபிடித்த நடிகைகளில் ஒருவரான ராதா இந்த படத்தில் மிகவும் வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். வயதான சிவாஜியுடன் அவருக்கு ஏற்படும் மெல்லிய காதலை தன்னுடைய அற்புதமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படத்திற்காக ஜாக்கெட் அணியாமல் புடவை மட்டும் கட்டிக்கொண்டு நடித்த ராதாவின் தைரியத்தை சக நடிகைகள் உட்பட பலரும் பாராட்டினர். ராதாவின் திரைவாழ்வில் முதல் மரியாதை அளவுக்கு கனமான கதாபாத்திரத்தை அவர் இதுவரை ஏற்கவில்லை.

இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்ற ராதாவிற்கு தேசிய விருது கிடைக்காமல் போனது தான் வருத்தம். தேசிய விருதைப் பெறுவதற்கு நடிப்பை போன்று அனைத்து தகுதிகளும் இருக்க வேண்டும். முதல் மரியாதை திரைப்படத்தில் ராதாவுக்கு, நடிகை ராதிகா பின்னணி குரல் கொடுத்திருப்பார்.

இந்த ஒரு காரணத்தினால் ராதாவுக்கு தேசிய விருது கிடைக்காமல் போய்விட்டது. நடிகர் திலகம் சிவாஜிக்கு ஈடுகொடுத்து அருமையாக நடித்திருந்த ராதா இந்த ஒரு காரணத்தினால் தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பை இழந்தார்.

Trending News