திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிம்புவை திட்ட சொன்னாங்க.. பல வருட ரகசியத்தை போட்டுடைத்த நடிகை ராதிகா

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிம்புவுடன் சித்தி இதானி, ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ், அப்புக்குட்டி ஆகியோர் நடித்திருந்தனர். வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்த இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்திருந்தது.

இந்த படத்தில் நடிகை ராதிகா சிம்புவுக்கு அம்மாவாக நடித்திருந்தார். 80ஸ், 90ஸ் களில் டாப் ஹீரோயினாக கலக்கிய இவர் இப்போது விஜய், விஜய் சேதுபதி, விஷால், சிவகார்த்திகேயன் போன்ற டாப் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிப்பில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார். ராதிகா எப்போதுமே மேடை பேச்சுக்களில் ரொம்ப கலகலப்பாகவும் அதே நேரத்தில் நிறைய உண்மைகளையும் பேசிவிடுவார்.

Also Read: சிம்புக்கு பறிபோன தேசிய விருது இயக்குனரின் பட வாய்ப்பு.. ஓவர் ஆட்டம் உடம்புக்கு ஆகாது

சமீபத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் 50 ஆவது நாள் கொண்டாட்டம் நடைபெற்று இருக்கிறது. அப்போது மேடையேறி பேசிய போது தான் சிம்புவுக்கே தெரியாத நீண்ட நாள் ரகசியம் ஒன்றை மேடையில் அனைவரின் முன்னிலையிலும் கூறியிருக்கிறார். ராதிகா வெளிப்படையாக பேசிய இந்த வீடியோ இப்போது பயங்கர ட்ரெண்டில் இருக்கிறது.

சிம்பு இப்போது வெற்றிப்படங்களுக்காக வளர்ந்து வரும் ஹீரோக்களை போன்று ஓடி உழைத்து கொண்டிருக்கிறார். ஆனால் சிம்பு சில வருடங்களுக்கு முன்பே டாப் ஹீரோ லிஸ்டில் வந்திருக்க வேண்டியவர். ஆனால் அவர் செய்த சில அலட்சியங்களினால் கிடைத்த வெற்றி மற்றும் பெயரை தொலைத்து விட்டு மீண்டும் அதை பிடிக்க கடின உழைப்பை போட்டுக் கொண்டிருக்கிறார்.

Also Read: சிம்பு பட ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. பத்து தல படத்துக்கு இவ்வளவு தான் டிமாண்ட்டா!

காதல் பிரச்னை, ‘பீப்’ பாடல் வரிகள் என அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கினார் சிம்பு. மேலும் அதிக உடல் எடை, படப்பிடிப்புக்கு ஒழுங்காக செல்லாமல் இருப்பது, இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் மோதல் என சிம்பு கோலிவுட்டில் ரெட் கார்ட் கொடுக்கும் அளவிற்கு பிரச்சனை செய்திருந்தார். அப்போது சிம்புவின் அப்பா, அம்மா நடிகை ராதிகாவிடம் அவரை கண்டிக்கும்படி சொன்னார்களாம்.

ராதிகாவும் சிம்புவை அழைத்து பேசியிருக்கிறார். இந்த சம்பவத்தை தான் ராதிகா அந்த மேடையில் பகிர்ந்து இருக்கிறார். சிம்பு கிட்டத்தட்ட 1 வருடமாக ஒர்க்கவுட் செய்து உடம்பைக் குறைத்து ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் ஒழுங்காக ஓடவில்லை. அதையடுத்து சிம்பு நடித்து மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு மெகா ஹிட் அடித்தது. இப்போது இவர் ‘பத்து தல’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: செம்ம பிஸி, அடுத்தடுத்து சிம்பு உறுதி செய்த 6 படங்கள்.. 2025 வரை என்னோட ராஜ்ஜியம்தான்

Trending News