சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

இலங்கையில் பல கோடி சொத்து.. ராதிகாவின் 2வது திருமணத்தில் இருக்கும் மர்மம்

Radhika – Richard Hardy: தமிழ் சினிமாவில் ஆட்சி மனோரமாவுக்கு அடுத்து பன்முக திறமை கொண்ட நடிகை என்றால் அது ராதிகா தான். நடிப்பு மட்டுமின்றி அவருடைய தைரியமான பேச்சுக்கும் பேர் போனவர். ராதிகாவுக்கு நடிகர் சரத்குமார் உடன் மூன்றாவது திருமணம் ஆன நிலையில் ரேயான் மற்றும் ராகுல் என்று இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் ரேயான், மிதுன் என்ற கிரிக்கெட் வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நடிகை ராதிகாவுக்கு முதல் திருமணம் இயக்குனர் மற்றும் நடிகர் பிரதாப் போத்தன் உடன் நடைபெற்றது. இவர் படிக்காதவன் படத்தில் நடிகர் தனுஷின் அப்பாவாக நடித்திருப்பார். திருமணமான ஒரு சில வருடங்களிலேயே ராதிகா மற்றும் பிரதாப்புக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படவே இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள். இந்த முதல் திருமணத்தில் ராதிகாவுக்கு குழந்தை எதுவும் இல்லை.

மர்மம் நிறைந்த 2வது திருமணம்

இந்த விவாகரத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்திய ராதிகா 1990 ஆம் ஆண்டு ரிச்சர்ட் ஹார்டி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த ரிச்சர்ட் ஹார்டி இலங்கையை பூர்வீகமாக கொண்ட பிரிட்டிஷ்காரர். இவருடனான இரண்டாவது திருமணத்தில் தான் ராதிகாவிற்கு ரேயான் என்ற பெண் குழந்தை பிறந்தது. இரண்டு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு ராதிகா அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்றுவிட்டார்.

Also Read: குடி ஜாஸ்தியாகி வாய்ப்பில்லாமல் திண்டாடி வரும் 5 ஹீரோயின்.. கிளாமர் தூக்கலான கிரண்

இந்த விவாகரத்திற்கு பிறகு தான் ராதிகா ரேடான் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியது. இதன் மூலம் சன் டிவியில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களை தயாரித்தார். அது மட்டும் இல்லாமல் ராதிகாவுக்கு ஸ்ரீலங்காவில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கிறது. இலங்கையில் மதிப்பிற்குரிய தொழிலதிபர்களின் லிஸ்டில் நடிகை ராதிகா இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் நடிகை ராதிகா இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லும் விருந்தினராக இருக்கலாம் என முன்னாள் அதிபர் ராஜபக்சே சொல்லியிருந்தார். அவருடைய குடும்பத்துடன் ராதிகாவுக்கு நெருக்கமான நட்பு இருக்கும் அளவுக்கு ராதிகா இலங்கையில் கோடீஸ்வரராக இருக்கிறார். ராதிகாவின் அம்மா கீதாவும் இலங்கையை சேர்ந்தவர்தான்.

இரண்டாவது திருமணம் மூலம் ஒரு மகள் இருக்கும் நிலையில் ராதிகாவின் கணவர் ரிச்சர்ட் ஹார்டி பற்றி பொதுவெளியில் இதுவரை எதுவுமே தெரியவில்லை. அவருடைய புகைப்படம் கூட எந்த சமூக வலைத்தளத்திலும் கிடையாது. எல்லா விஷயத்தை தைரியமாக பேசும் ராதிகா அவருடைய இரண்டாவது திருமணத்தை மட்டும் பற்றி பேசியதே இல்லை. அவருடைய மகள் ரேயான் கூட தன்னுடைய அப்பாவை பற்றி எதுவுமே வாய் திறந்து சொன்னது கிடையாது.

Also Read: ரஜினியின் தில்லு முல்லு மாதவிய ஞாபகம் இருக்கா.? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்

Trending News