Ramya Pandiyan: நடிகை ரம்யா பாண்டியன் வீட்டில் விசேஷம் கலை கட்டி இருக்கிறது. தமிழ் சினிமாவில் வெற்றி கதாநாயகியாக வர முடியவில்லை என்றாலும் அதிக கவனம் எடுத்த கதாநாயகி ரம்யா பாண்டியன்.
சினிமாவை தாண்டி குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி இவரை ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது.
தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வந்தார் ரம்யா பாண்டியன்.
சினிமா வாய்ப்புகள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் என சுற்றிக் கொண்டிருந்த ரம்யா பாண்டியன் யோகாவில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.
ரம்யா பாண்டியன் வீட்டுல விசேஷங்க!
அவருக்கு யோகா பயிற்சி கொடுத்தவர்தான் லவ்வல் தவான். இருவரது நட்பும் காதலாகி கடந்த நவம்பர் மாதம் ரிஷிகேஷ் உள்ள கங்கை நதி கரையில் அமைந்திருக்கும் கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்றே மாதத்தில் ரம்யா பாண்டியன் தம்பி பரசு தன்னுடைய நீண்ட நாள் காதலியை கரம் பிடித்திருக்கிறார்.
ரம்யா பாண்டியன் வீட்டு விசேஷ புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரம்யா பாண்டியனின் நெருங்கிய உறவினரான நடிகர் அருண்பாண்டியன் மற்றும் அவருடைய மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோரும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.