வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

இவர்தான் பா அந்த அதிர்ஷ்டக்காரர்!. காதலரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய ரம்யா பாண்டியன்

Ramya Pandiyan: நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின்னர் ஆண் தேவதை என்னும் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார். இந்த இரண்டு படங்களில் நடித்தும் ரம்யா பாண்டியனுக்கு அந்த அளவுக்கு ரசிகர்களிடையே பெரிய அளவில் பெயர் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை மாடியில் புடவையுடன் உட்கார்ந்திருக்கும் போட்டோக்களை பகிர்ந்தார். அவ்வளவுதான் ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ரம்யா பாண்டியன் யார் என தேட ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த மொட்டை மாடி புகைப்படத்தின் மூலம் ரம்யா பாண்டியனுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் தொடர்ந்து ரம்யா பாண்டியனுக்கு தொடர்ந்து வாய்ப்புகளும் கிடைக்க ஆரம்பித்தது.

காதலரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியனுக்கு கூட்டம் ரொம்ப அதிகம், அந்த ரசிகர்களுக்கு இன்று தன்னுடைய காதலரை ஒரு வீடியோ மூலம் அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே இந்த விஷயம் கிசு கிசு வாங்க வெளியில் வந்து கொண்டிருந்த நேரத்தில் தற்போது அதிகாரப்பூர்வமாக ரம்யாவே வெளியே தெரிகிறார்.

ரம்யா பாண்டியனின் காதலர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். அதை குறிப்பிடும் வகையில் தன்னுடைய காதலரின் பெயரை இந்தியில் குறிப்பிட்டு விரைவில் என அந்த வீடியோவை முடித்திருக்கிறார். ரம்யா பாண்டியனின் காதலர் யோகா ஆசிரியர் ஆக இருக்கிறார்.

ரம்யா பாண்டியன் யோகா வகுப்புக்கு செல்லும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ரசிகர்கள் பலரும் ரம்யாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

Ramya Pandiyan
Ramya Pandiyan

Trending News