ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

2 ஆம் திருமணத்திற்கு தயாரான நடிகை.. இணையத்தையே நாரடித்த சம்பவம்

நடிகை முதல் படத்திலிருந்து மோசமான காட்சியில் நடித்த நிலையில் அந்த படம் அவருக்கு கை கொடுக்காமல் போய்விட்டது. ஆனாலும் அடுத்ததாக அவர் நடித்த படம் மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. அதன் பிறகு தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை மட்டுமே நடிகை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

இதனால் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை தன்னுடன் பணியாற்றிய பிரபலம் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் நடிகையின் கணவர் குடும்பத்திற்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை என்றாலும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் நடிகை மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்த நிலையில் அவரது நடவடிக்கை சுத்தமாக கணவரின் குடும்பத்திற்கு பிடிக்காமல் போய்விட்டது.

அதுவும் எல்லை மீறி கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். இந்த சூழலில் கணவர் இனி சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று சொல்லியும் பேச்சை மீறி நடிகை தொடர்ந்து இதுபோன்று செய்து கொண்டிருந்தார். இதனால் இதற்கு மேல் இது சரிப்பட்டு வராது என இருவருமே மனம் ஒத்து பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு விவாகரத்தான சில வருடங்களிலேயே நடிகையின் முன்னாள் கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம், குட்டி என செட்டில் ஆகிவிட்டார். ஆனால் நடிகைக்கு விவாகரத்திற்கு பின்பு பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த நடிகை பட வாய்ப்புக்காக சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.

சினிமாவில் நடிகையை பார்க்க முடியவில்லை என்று நினைத்து ஏங்கிய அவரது ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நடிகை தரிசனம் கொடுத்து வந்திருந்தார். அதன் விளைவாக பழையபடி நடிகைக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. அவ்வாறு நடிகை கம்பேக் கொடுத்த படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மீண்டும் பட வாய்ப்புகள் மந்தமடைந்த நிலையில் இப்போது நடிகை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள உள்ளார். சமீபத்தில் பர்த்டே பார்ட்டி ஒன்றில் தனது காதலன் உடன் நடிகை இணையத்தையே நாரடிக்கும் அளவுக்கு லிப் லாக் கொடுத்திருக்கிறார். மேலும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. என்னதான் வருங்கால கணவராக இருந்தாலும் பொது இடத்தில் இவ்வாறு செய்து அந்த வீடியோவை இணையத்தில் பதிவிடுவதா என ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

Trending News