செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

டூ பீஸ் போட சொன்னாலும் ஓகே, வாய்ப்பு கொடுங்க ப்ளீஸ்.. தயாரிப்பாளர்களிடம் கெஞ்சும் குத்துவிளக்கு நடிகை

தமிழ் சினிமாவில் வந்த வேகத்திலேயே மிகப் பெரிய நடிகையாக வளர்ந்து கொண்டிருந்த வாரிசு நடிகை ஒருவர் சமீபகாலமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் தயாரிப்பாளர்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் படம்தான் புதிய கிசுகிசுவை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள வரவாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் அந்த வாரிசு நடிகை. முதல் படம் என்னமோ சுமாரான நடிகருடன் தான் நடித்தார்.ஆனால் அந்த படம் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி வெளியாவதற்கு லேட் ஆனது.

ஆனால் அதற்கு முன்பே சீக்கிர நடிகர் நடித்த படம் ஒன்று வெளியாகி இந்த நடிகைக்கு ஏகப்பட்ட வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. முதல் படத்திலேயே இவர்தான் அடுத்த கனவுக்கன்னி என ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டார்.

அதை பயன்படுத்தி உச்ச நடிகரின் படத்தில் வாய்ப்பு கிடைத்து மளமளவென மேலே வந்து கொண்டிருந்தார். ஆனால் யார் பேச்சைக் கேட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்தார் என்றுதான் தெரியவில்லை. உடல் எடையோடு சேர்த்து மொத்த பட வாய்ப்பும் நாமம் போட்டுக் கொண்டு சென்றது.

தற்போது அக்கட தேசத்தில் சில பட வாய்ப்புகள் இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென இருந்த ஒரே இடத்தை வேறு ஒருவருக்கு பறி கொடுத்து விட்டோமே என கவலையில் உள்ளார். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக நடிகை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் இறங்க ஆரம்பித்து விட்டார்.

முன்னரெல்லாம் நடிகர்கள் கிட்ட கூட போகாத நடிகை தற்போது படுக்கையறைக் காட்சியில் நடிகருடன் கட்டி உருளவும் தயாராக உள்ளார். கவர்ச்சி காட்டவும் ரெடி என பச்சைக் கொடி காட்டி விட்டாராம். உடனே தயாரிப்பாளர் ஒருவர் டூ பீஸ் ஓகேவா? என கேட்டதற்கு, அதற்கு எவ்வளவு கொடுப்பீங்க என்று கேட்டதன் மூலம் அம்மணி அனைத்திற்கும் ரெடி தான் என புரிந்து கொண்டார்களாம் தயாரிப்பாளர்கள்.

Trending News