செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

கவர்ச்சி காட்ட காசை கொட்டும் தயாரிப்பு நிறுவனம்.. தாராளம் காட்டும் மலையாள நடிகை

மலையாளத்தில் பிரபலமாக இருப்பவர் அந்த நடிகை. அதைத் தொடர்ந்து அவர் தமிழில் சூப்பர் நடிகரின் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவ்வளவாக பிரபலமாகாத நடிகை அதற்கு அடுத்து நடித்த திரைப்படத்தில் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

அவர் நடித்த அந்த மாஸ் திரைப்படம் வெற்றி அடைந்தாலும் நடிகைக்கு அதன்பிறகு எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது நடிகை தமிழில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமூக வலைதளங்களில் ரொம்பவும் கிளாமராக இருக்கும் போட்டோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். சின்ன திரை முதல் பெரிய திரை வரை அனைவரும் அடிக்கடி செல்லும் அந்த தீவுக்கு நடிகையும் சென்றுள்ளார்.

அங்கு அவர் இதற்குமேல் கவர்ச்சி காட்ட முடியாது என்னும் அளவிற்கு ஆடை அணிந்து ஏராளமான போட்டோக்களை எடுத்துள்ளார். அந்த போட்டோக்கள் யாவும் தற்போது இணையதளத்தை கலக்கி வருகிறது. எப்பவும் இப்படி கவர்ச்சி காட்டாத நடிகை இப்போது ஏன் இப்படி போட்டோக்களை போடுகிறார்கள் என்று பலரும் யோசித்தனர்.

இந்நிலையில் நடிகை தற்போது நடித்து வரும் படத்தின் விளம்பரத்திற்காக தான் இப்படி போட்டோக்களை போட்டு அனைவரையும் கவர்ந்து வருகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. நடிகை தற்போது ஒல்லி நடிகருடன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகரின் கடந்த சில திரைப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றி அடைய தவறியது.

இதனால் தயாரிப்பு நிறுவனமே நடிகையை அந்த தீவுக்கு தங்களுடைய செலவில் அனுப்பி இப்படி ஒரு ஏற்பாடு செய்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர். இதனால் படத்தை விளம்பரம் செய்வதற்கு இப்படியெல்லாமா செய்வார்கள் என்று அனைவரும் வெளிப்படையாகவே கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending News