புதன்கிழமை, ஜனவரி 15, 2025

6 வயதில் பொம்மை போல் இருக்கும் ரித்திகா சிங்.. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

பாக்சராக இருந்து தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரித்திகா சிங். 2002ஆம் ஆண்டு டார்சான் கி பேட்டி என்ற இந்தி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அதன்பிறகு தமிழில் இறுதிச்சுற்று திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்று பல விருதுகளை வாங்கிக் குவித்தது. இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் சைமா விருது உள்ளிட்ட பல விருதுகளை ரித்திகா சிங் பெற்றுள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் தமிழைத் தவிர ஹிந்தி, தெலுங்கு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இவர் ஒரே கதாபாத்திரத்திற்காக மூன்று மொழிகளிலும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இறுதிச்சுற்று படத்தை தொடர்ந்து தமிழில் சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் தமிழ் மொழியை தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் தன் ஃபேமிலி போட்டோக்களை ஷேர் செய்து வரும் ரித்திகா தற்போது தன்னுடைய சிறுவயது போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

அதில் ரித்திகா பார்ப்பதற்கு பொம்மை போல இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் ரித்திகாவை பேபி டால் என்றும், மெழுகு பொம்மை என்றும் வர்ணித்து தள்ளுகின்றனர்.

தற்போது ரித்திகா தமிழில் பாக்சர், வணங்காமுடி, பிச்சைக்காரன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது நடிகை ஆகிவிட்டாலும் விளையாட்டிலும் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

Trending News