ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

பல வருஷமா நடித்தும் ஒரு பிரயோஜனமும் இல்ல.. முதல்வரிடம் நேரடியாக கேட்ட பிரபலம்

தமிழ் சினிமாவில் ஐந்து வயதில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து இன்று அனைத்து தலைமுறை நடிகர்களுடனும் நடித்த பெருமை கொண்டவர் நடிகை சச்சு. இவர் 1952 ஆம் ஆண்டு ராணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர் வீரத்திருமகன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு காமெடி நடிகர் நாகேஷுக்கு ஜோடியாக காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அந்த திரைப்படத்தில் அவருடைய நடிப்புக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. இதனால் அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் பல காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். கலாட்டா கல்யாணம், ஊட்டி வரை உறவு போன்ற திரைப்படங்கள் அவருடைய சினிமா வாழ்வில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ரஜினி, கமல், விஜய், சூர்யா, கார்த்தி போன்ற அனைத்து நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதுதவிர சின்னத்திரை சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். சன் டிவியில், சுந்தர் சி இயக்கத்தில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட நந்தினி என்ற சீரியலில் இவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

ஒருமுறை நடிகை சச்சு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் அவர் நான் ஐந்து வயதில் இருந்து 70 வயது வரை சினிமாவில் நடித்து விட்டேன் இயல், இசை, நாடக தலைவராகவும் இருந்தேன்.

ஆனால் தமிழக அரசு எனக்கு இதுவரை எந்த விருதினையும் கொடுத்து கௌரவப்படுத்த வில்லை என்று மிகவும் ஆதங்கத்துடன் கூறியிருந்தார். அவரின் அந்த கடிதத்தைப் பார்த்த ஜெயலலிதா 1992ம் வருடம் அவருக்கு கலைமாமணி விருதை வழங்கி கௌரவித்தார்.

அதன்பிறகு கடந்த 2012ஆம் ஆண்டு நாடக சபாவின் சார்பாக அவருக்கு நாடக சூடாமணி விருதும் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சச்சு தற்போது இளம் நடிகர்களின் திரைப்படங்களில் பாட்டி கேரக்டரில் நடித்து வருகிறார்.

Trending News