வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

தலைவிரித்தாடும் பாடி ஷேமிங்.. உருவ கேலியால் சாய் பல்லவிக்கு நடந்த கொடுமை

நாகரீகம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் பாப் கலாச்சாரம் என்பது தற்போது அதிகமாகிவிட்டது. அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அழகு தான் எல்லாமே என்ற ஒரு மாய பிம்பத்தை நமக்குள் விதைக்கும் இந்த கலாச்சாரம் தான் பாப் கலாச்சாரம்.

இப்பொழுது பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் ஷார்ட்ஸ் போன்ற செயலிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அதில் அவர்கள் நடனம், நடிப்பு என்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த செயலிகளில் பலரும் தங்கள் இயல்பான முகத்தை காட்டுவதில்லை.

பில்டர்ஸ் சொல்றவற்றை பயன்படுத்தி கருப்பான முகத்தை கலராக காண்பிப்பது போன்ற பல விஷயங்களில் ஆர்வம் காட்டுகின்றனர். ஏனென்றால் தங்களைப் பற்றி யாராவது உருவ கேலி செய்து விடுவார்களோ என்ற பயம் தான் அதற்கு காரணமாக இருக்கிறது.

ஆம் இந்த உருவ கேலியாய் பல கொடுமைகள் அரங்கேறி வருகிறது. சிலர் இதற்கு பயந்து தங்களுக்குள்ளே தாழ்வு மனப்பான்மையுடன் வலம் வரும் சூழ்நிலையும் இப்போது இருக்கிறது. ஆனால் இதையே தங்களுடைய திறமையால் உடைத்து எறிந்த சிலரும் இருக்கின்றனர்.

அப்படி தன்னுடைய திறமையால் இந்த உருவ கேலியை எதிர்த்து போராடியவர் தான் நடிகை சாய் பல்லவி. மலர் டீச்சராக நமக்கு அறிமுகமாகி தன்னுடைய திறமையால் பல விருதுகளை வாங்கி குவித்த இவரும் ஆரம்ப காலகட்டத்தில் இது போன்ற உருவ கேலியை சந்தித்திருக்கிறார்.

அதாவது இவருடைய முகத்தில் பருக்கள் அதிகமாக இருக்கிறது, மூக்கு, உதடு சரியில்லை போன்ற பல பேச்சுக்கள் அப்போது எழுந்தது. மேலும் இவர் ஒரு ஹீரோயின் மெட்டீரியலே கிடையாது என்றெல்லாம் பேசினார்கள். ஆனால் சாய் பல்லவி தன்னுடைய உழைப்பாலும் திறமையாலும் அவர்களை எல்லாம் வாயடைக்க செய்து விட்டார்.

தற்போது இவருக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அற்புதமான திறமை, அருமையான நடிப்பு என்று இவர் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார். இவர் மட்டுமல்லாமல் திரைத்துறையில் தனுஷ், அஜித் போன்ற நடிகர்களும் இந்த விஷயத்தை தாண்டி வந்தவர்கள் தான். அந்த வகையில் இவர்கள் எல்லாம் பலருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.

Trending News