ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அந்த நடிகர்னா ஓகே, இயக்குனர்னா கசக்குதா.. தனக்குத்தானே ஏழரை கூட்டிக் கொள்ளும் சாய் பல்லவி

Sai Pallavi: நடிகை சாய் பல்லவி சமீபத்தில் தன்னை பற்றி எழுந்த வதந்தி ஒன்றுக்கு கொடுத்த பதிலடி அந்த சமயத்தில் ரசிகர்களிடையே அதிக ஆதரவு மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் தற்போது நாளடைவில் அது அவருக்கு எதிராகவே மாறி இருக்கிறது. தற்போது நெட்டிசன்கள் சரமாரியாக சாய் பல்லவியை கேள்வி கேட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

விஜய் டிவியின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்னும் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் சாய்பல்லவிக்கு வாய்ப்பு கிடைத்தது. பிரேமம் படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்த இவர், ஒப்பனை இல்லாத முகம், இயல்பான அழகு மூலம் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தார். அதிலும் தமிழ் சினிமா ரசிகர்கள் இன்றுவரை சாய் பல்லவியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

Also Read:காசு வாரி கொடுத்தா ஓகே, ஜெயம் ரவின்னா கசக்குதா.. தூக்கிவிட்டவரை நன்றி மறந்த நயன்தாரா

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாக்களிலேயே சாய் பல்லவிக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கிறது. அதிலும் முக்கியமாக தெலுங்கில் இவருக்கென்று ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறார்கள். அதற்கு இவரின் நடனமும் ஒரு காரணம். இவர் சிறப்பாக நடனம் ஆட கூடியவர் என்பது பிரேமம் படத்தின் ஒரு காட்சியிலேயே தெரியும்.

சமீபத்தில் ஒரு பட பூஜையில் கலந்து கொண்ட சாய் பல்லவியின் புகைப்படம் அவர் அருகில் இருந்த இயக்குனருடன் கட் செய்யப்பட்டு, காதலுக்கு கலர் முக்கியமில்லை, திருமணத்திற்கு வாழ்த்துக்கள் சாய் பல்லவி என மீம்ஸ் கிரியேட் செய்யப்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியது. இதனால் அவர் பயங்கர அப்செட் ஆனதோடு, இதற்கு பதில் சொல்லும் விதத்தில் ஒரு பதிவையும் பதிவிட்டிருந்தார்.

Also Read:மீண்டும் இணையும் சமந்தா – நாக சைதன்யா.. ஒரே போட்டோவால் வதந்திகளுக்கு வைத்த முற்றுப்புள்ளி

அந்தப் பதிவில், இதுபோன்ற வதந்திகளால் என் குடும்பம் பாதிக்கப்படுகிறது, எங்கள் உறவினருக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும், இது போன்ற விஷயங்கள் தவறு என ஏகத்துக்கும் எழுதி பொங்கி எழுந்திருந்தார். ஆரம்பத்தில் சாய் பல்லவிக்கு இதில் அனுதாபம் அலைகள் எழுந்ததோடு, அவருக்கு ஆதரவாக நிறைய பேர் கமெண்ட் செய்திருந்தனர்.

அதே நேரத்தில் சிலர் இதேபோன்று சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகர் நாக சைதன்யா உடன் சாய்பல்லவி காதலில் இருப்பதாகவும், அதனால்தான் சமந்தா விவாகரத்து செய்ததாகவும், விரைவில் இவர்கள் திருமணம் செய்யப் போவதாகவும் கிசுகிசுக்கள் எழுதப்பட்டது. அப்போது நீங்கள் என்ன கோமாவில் இருந்தீர்களா, அந்த சமயத்தில் ஏன் இதுபோன்ற பதில் சொல்லவில்லை, அப்போ அந்த நடிகர் தான் ஓகே, இயக்குனருடன் சேர்த்து பேசுவது தான் பிரச்சனையா என கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Also Read:அப்படி ஒரு கேவலமான காட்சியில் நடிக்க மறுத்த சதா.. கட்டாயப்படுத்தி காரியத்தை சாதித்த இயக்குனர்

Trending News