புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

முதுகுக்கு ஒரு ஜன்னல் வச்சிருக்கலாம்.. கருப்பு உடையில் சாக்‌ஷி அகர்வால்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் சினிமாவில் நுழையும் முன்பு, 100க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார்.

அவற்றில், ஏர் ஆசியா, ஹெப்ரான் பில்டர்ஸ், கல்யாண் சில்க்ஸ், சிஎஸ்சி கம்யூட்டர்ஸ், மலபார் கோல்டு, சக்தி மசாலா உள்ளிட்டவை ஆகும். மாடல் அழகியாக இருந்து சினிமாத்துறையில் கால் பதித்த அவர் பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழில், ராஜா ராணி, சாப்ட்வேர் காந்தா, யோகன், காலா, விஸ்வாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

2019 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விஜய் டிவியின் பிக்பாஸ் -3 சீசனில் போட்டியாளராகப் பங்கேற்று மக்களின் பரவலான கவனத்தைப் பெற்றார்.

தற்போது ஜஸ்ட் மேரிட், கெட்டனு பேரெடுத்த நல்லவண்டா, மதில் மேல் காதல், ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். வரும் டிசம்பர்30 ஆம் தேதி அவர் நடித்துள்ள ஃபையர் படம் ரிலீசாகவுள்ளது.

- Advertisement -

Trending News