தமிழ் சினிமாவில் தற்போது மார்க்கெட் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர் சில அட்ஜஸ்ட்மெண்ட்களுக்கு ஓகே சொன்னதால் தற்போது அவரது வீட்டை நோக்கி தயாரிப்பாளர்கள் படையெடுக்க தொடங்கி விட்டார்களாம்.
ஆரம்பத்தில் நல்ல நல்ல படங்களில் நடித்து வந்த அந்த நடிகை இடையில் தன்னுடைய சித்தி கொடுமையில் சிக்கி சின்னாபின்னமானார். அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்கே அவருக்கு பல வருடங்கள் ஆனது.
இடையில் உடல் எடை வேறு கண்டமேனிக்கு அதிகமாகி பார்ப்பதற்கு ஆண்ட்டி போல இருந்தார். அதன்பிறகு அந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வந்தவருக்கு தமிழ் சினிமாவில் சில வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் எதிர்பார்த்த இடத்தை பிடிக்க முடியவில்லை.
இருந்தாலும் நாயகிக்கு தெலுங்கு சினிமாவில் ஓரளவு நல்ல வரவேற்பு இருப்பதால் தற்போது அங்கு சில படவாய்ப்புகள் கைவசம் வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழிலும் விட்ட பழைய இடத்தை மீண்டும் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஒரு ஐடியா ஒன்றை செய்துள்ளார்.
சமீபத்தில் ஒரு படத்திற்காக வந்த தயாரிப்பாளரிடம் அதிகளவு சம்பளம் கேட்டுள்ளார் நடிகை. உங்களுக்கு இங்க இருக்கிற மார்க்கெட்டுக்கு இவ்வளவு கொடுத்தால் கட்டுபடியாகாது என பணப்பெட்டியை ஓரமாக எடுத்து வைத்துவிட்டார் தயாரிப்பாளர். இதைப் பார்த்த அந்த நாயகி வர்ற லட்சுமியை விடக்கூடாது என்பதற்காக சம்பள விஷயத்தில் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம் என ஓகே சொல்லிவிட்டாராம்.
அதன் காரணமாக தயாரிப்பாளர் பாதி விலைக்கு பேசி முடித்துவிட்டார். தற்போதைக்கு தமிழில் வாய்ப்பு தான் முக்கியம் என விவரமாக உள்ள அந்த பிள்ளை விரைவில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வரும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.