தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தமிழில் பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்பு தொடர்ந்து பல படங்களில் டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இவர் கடைசியாக தெலுங்கில் ஜானு என்ற படத்தில் நடித்துள்ளார்.
அதே படம் தமிழில் 96 என்ற பெயரில் வெளியானது. அதன்பின்பு தெலுங்கு பிரபலம் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் கிளாமர் கொஞ்சம் கூடுதலாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களிடம் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தற்போது விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்திலும், தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் ஷகுந்தலம் என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் வெப் சீரிஸ்களை நடிப்பதில் கவனம் செலுத்தும் சமந்தா, கடைசியாக இவர் நடித்த ‘தி ஃபேமிலிமேன் 2’ என்ற வெப் சீரிஸில் ராஜி கதாபாத்திரம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
ஏனென்றால் இந்த சீரிஸில் இலங்கை தமிழர்கள் குறித்தும், விடுதலைப் புலிகள் குறித்தும் தவறாக காட்டுவதாக தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அதிலும் குறிப்பாக சமந்தாவிற்கு கண்டனங்கள் குவிந்தன.
அதன் பிறகு சமந்தா பேட்டி ஒன்றின் மூலம் ‘தி ஃபேமிலிமேன் 2’ என்ற வெப் சீரிஸ் வெளியாகும் முன்பு வந்த கண்டனத்தை விட, சீரிஸ் வெளியான பிறகு வந்த கண்டனம் குறைவு தான். இருப்பினும் வெறுப்பவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.
நான் அவர்களிடம் உண்மையாகவே மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இதில் நடித்ததன் மூலம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால், அதற்காக வருந்துகிறேன் என்று சமந்தா கூறியது தற்போது திரையுலகில் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.